- Home
- Lifestyle
- வீட்டில் எறும்பு தொல்லை தாங்க முடியலையா..? இயற்கை முறையில் ஓட ஓட விரட்டி அடிக்க எளிமையான நச்சு டிப்ஸ்..
வீட்டில் எறும்பு தொல்லை தாங்க முடியலையா..? இயற்கை முறையில் ஓட ஓட விரட்டி அடிக்க எளிமையான நச்சு டிப்ஸ்..
Ant Problem at Home: நம்முடைய வீடுகளில் கரப்பான், பல்லி, போன்றவற்றின் தொல்லையை கூட ஒழித்து கட்டி விடலாம். ஆனால், வீட்டில் இருக்கும் எறும்பு பிரச்சனையை நாம் என்ன தான் முயற்சி செய்து பார்த்தாலும் தீர்க்க முடிவதில்லை.

Ants
நம்முடைய வீடுகளில் எறும்புகள் படை எடுக்க ஆரம்பித்து விட்டால், வரிசை வரிசையாக வந்த நிற்கும். நீங்கள் என்ன தான் எறும்பு சாக்பீஸ், சிமெண்ட் அடைப்பு போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும், அதையும் துளைத்துக் கொண்டு வந்து விடும். இந்த தீராத எறும்பு தொல்லையை சுலபமான முறையில் எப்படி தீர்ப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
peppermint oil
மிளகுக்கீரை
மிளகுக்கீரை என்பது இயற்கையான பூச்சி விரட்டியாகும், இது எறும்புகள் மற்றும் கொசுக்கள் போன்ற பிற பூச்சிகளை கொல்லும் திறன் கொண்டவை. ஒரு சுத்தமான பிளாஸ்டிக் ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீருடன் 10 முதல் 20 சொட்டு மிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெயை கலக்கவும்.
உங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றி கலவையை தெளிக்கவும். குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றிற்கு எட்டாதவாறு வைத்திருங்கள், அவை வெளிப்பட்டால் மிகவும் நோய்வாய்ப்படும்.
புதினா:
புதினாவின் வாசனை, எறும்புகளுக்கு பிடிப்பதில்லை. புதினாவை காய வைத்து பின் அதனை பொடியாக்கிக் எறும்பு வரும் இடங்களில் தூவி விட்டால் அந்த வாசனைக்கு எறும்புகள் அந்த பகுதியை சுற்றிலும் வரவே வராது.
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய்:
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் மரத்தில் இருந்து எடுக்கப்படும் மற்றொரு இயற்கை பூச்சி விரட்டியாகும். இதில் சிட்ரோனெல்லா உள்ளது, இது கொசுக்கள் மற்றும் பிற பறக்கும் பூச்சிகளை விரட்ட பயன்படுகிறது. நிச்சயம் இது எறும்புகளை விரட்டுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
எலுமிச்சைச்சாறு, புதினா சாறு, பூண்டுச் சாறு இந்த மூன்றையும் சரி பாதியாக கலந்து ஒரு காலியான ஸ்ப்ரே பாட்டிலில் பில்டர் செய்து எடுத்து வைத்துக் கொண்டால் போதும். வீடுகளில் மூலை முடுக்குகளில் மறைந்துள்ள எறும்புகளையும் தேடி தேடி கொல்லும்.
மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள்:
வீட்டில் எறும்புகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், உடனே அதன் துளைகளில் சிறிதளவே மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு விடுங்கள். அப்படி செய்தால், அந்த இடத்தில் எறும்புகள் வரவே வராது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு:
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு எறும்புகளை கொல்லும் சிறந்த முறையாகும். எனவே, வீடு துடைக்கும் பொழுது இவற்றில் இருந்து ஒரு மூடி பயன்படுத்தினால் தரைப்பகுதியும் சுத்தமாக பளிச்சிடும். எறும்பும் வரவே வராது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.