MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் ஏன் வருது தெரியுமா? இப்பவே கவனிக்க வேண்டிய விஷயம்!!

குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் ஏன் வருது தெரியுமா? இப்பவே கவனிக்க வேண்டிய விஷயம்!!

Finger Sucking Problems In Kids : உங்கள் குழந்தையிடம் இன்னும் விரல் சூப்பும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். இல்லையெனில், இந்த பிரச்சினைகள் வரும். அது என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 06 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Finger Sucking Problems In Kids In Tamil

Finger Sucking Problems In Kids In Tamil

பொதுவாகவே சின்ன குழந்தைகள் பலருக்கும் கை சூப்பும் பழக்கம்  இருக்கும். இதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். உறங்கும்போது, நடக்கும் போது என விரும்பிய நேரங்களில் கை சூப்புவார்கள். விரல் சூப்புவதால் அப்படி என்ன நடந்து விடப்போகிறது என்று பல பெற்றோர்களும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். 

ஆனால், மருத்துவர்களின் கூற்றுப்படி, 3 வயது வரை குழந்தைகள்  கை சூப்புவது சாதாரணமானது தான். அதுவே, 5 வயதிற்குப் பிறகும் குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா?

25
Finger Sucking Problems In Kids In Tamil

Finger Sucking Problems In Kids In Tamil

ஆம், குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் அதிகமாக இருந்தால் அது அவர்களது தனிமை மற்றும் பசி உணர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் இந்த பழக்கம் அவர்களது பல்வேறு பற்கள் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். சொல்லப்போனால் குழந்தைகளிடம் இருக்கும் இந்த கை சூப்புபழக்கம் அவர்களை பலவித பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்.

இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் அதிகமாக இருந்தால் அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  ஒரு வயசான அப்பறமும்  குழந்தை நடக்கலயா? இந்த காரணமா கூட இருக்கலாம்!!

35
Finger Sucking Problems In Kids In Tamil

Finger Sucking Problems In Kids In Tamil

குழந்தைகள் கை சூப்புவதால் ஏற்படும் பாதிப்புகள்:

பற்கள் ஒழுங்காக வளராது

பல குழந்தைகள் வளர்ந்த பிறகும் கூட வாயில் விரல் வைக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்து அவை விழுந்து, பிறகு மீண்டும் முளைக்கும் பற்கள் ஒழுங்காக அல்லாமல், பற்கள் ஏனோ தானோ என்று தான் பற்கள் வளரும். மேலும் சிலருக்கு எத்து பல்லாகிடும். மேலும் இப்படி வளரும் பற்களில் பலம் இருக்காது. 

கை சூப்பும் விரலில் ரத்த ஓட்டம் குறையும்

உங்கள் குழந்தையிடம் கை சூப்பும் பழக்கம் வளர்ந்து பிறகும் கூட இருந்தால், கை சூப்பும் அந்த விரலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் அந்த விரல் உணர்வற்று போய்விடும். இது தவிர, முக்கிய உறுப்புக்கான கை மற்றும் பிற உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். 

45
Finger Sucking Problems In Kids In Tamil

Finger Sucking Problems In Kids In Tamil

குழந்தையின் மனநிலை பாதிக்கப்படும்

குழந்தையிடம் இருக்கும் இந்த கை சூப்பும் பழக்கம் வீட்டில் மட்டுமன்றி, பள்ளியிலும் இருந்தால் மற்ற குழந்தைகளின் கேலிக்கு ஆளாவார்கள். இதனால் குழந்தையின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும்.

மது, சிகரெட்டுக்கு அடிமை

கை சூப்பும் பழக்கம் குழந்தையிடம் இருந்தால், அவர்கள் வளர்ந்த பிறகும் கூட வாயில் எதையாவது வைக்க வேண்டும் என்று தோன்றும். இதனால் அவர்கள் சிகரெட் பிடிப்பது, மது மற்றும் போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:  குழந்தைங்க பல்லை சொத்தையாக்கும் '4' உணவுகள்..! முத்து போன்ற பற்களுக்கு டிப்ஸ்

55
Finger Sucking Problems In Kids In Tamil

Finger Sucking Problems In Kids In Tamil

நினைவில் கொள்:

1. உங்கள் குழந்தையிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஆனால் அவர்களை பாதிக்காதவாறு, அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். சிறுவயதிலேயே இந்த பழக்கத்தை நீங்கள் நிறுத்தினால், பின்னாளில் குழந்தையின் வாழ்க்கையை பாதிக்காது.

2. கை சூப்பும் பழக்கத்தை குழந்தைகள் நிறுத்துவதற்காக அவர்களை பயமுறுத்த வேண்டாம். இதனால் அவர்களது மனநலம் தான் பாதிக்கப்படும். எனவே அவர்களை சுலபமாக கையாளுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்காத படி அன்பாய் அவர்களிடம் பேசி அந்தப் பழக்கத்தை நிறுத்துவது தான் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved