தண்ணீர் பாட்டில் மூடி பற்றி தெரியுமா? தரத்தை காட்டும் மூடி நிறங்கள்!!
தண்ணீர் பாட்டில் மூடிகளின் நிறத்தை வைத்தே அவற்றின் தரத்தை எப்படி கண்டறியலாம் என இந்தப் பதிவில் காணலாம்.

Meaning Of Different Colours Of Water Bottle Caps : அடிக்கும் வெயிலில் தண்ணீர்தான் ஜீவ ஊற்றாக விளங்குகிறது. வெளியில் செல்லும்போது தண்ணீர் தவிக்கும்போது உடனே ஒரு பாட்டில் வாங்கி குடிக்க வேண்டும் எனத் தோன்றும். அப்படி ஏதோ ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்பதை விட அதன் தரத்தை பார்த்து வாங்கி குடிக்க வேண்டும். எந்த நிற மூடியுள்ள பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
வெள்ளை நிறம்:
நீங்கள் வாங்கும் தண்ணீர் பாட்டில் மூடியின் நிறம் வெள்ளை என்றால் அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டது.
mineral water bottle
பச்சை நிறம்:
பச்சை நிற பாட்டில் என்றால் அந்த தண்ணீர் சுவையூட்டப்பட்ட நீராகும். அந்த தண்ணீரை குடிக்கும்போதே வித்தியாசமாக இருக்கும்.
நீல நிறம்:
நீல நிற மூடிகள் கொண்ட பாட்டில்கள் என்றால் இயற்கை நீர்நிலைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என அர்த்தம். தாதுக்கள் நிறைந்த நீர் என்று பொருள். அதனால் தான் மினரல் வாட்டர் என்கிறார்கள்.
கருப்பு நிறம்:
மூடிகள் கருப்பாக இருந்தால் ஆல்கலைன் சேர்க்கப்பட்ட நீராகும். இந்த தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள அமிலத்தன்மையை எதிர்க்கும். இதனால் உடலுக்கும் நல்லது.