Sani peyarchi 2022: தயவு தாட்சண்யம் இல்லாத கர்ம நாயகன் சனி பகவான்..இந்த ராசிகளுக்கு மட்டும் நிவாரணம் தருகிறார்
Sani peyarchi 2022 Palangal; சனியின் வக்ர நிலை மாற்றத்திற்கு பிறகு சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். அவைகள் எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
sani peyarchi 2022
ஜோதிடத்தில் உள்ள மற்ற 8 கோள்களுக்கும் சனி கோளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற கோள்கள் அவை நிலை பெற்றிருக்கும் இடத்தைக் கொண்டு இயக்குவன. ஆனால், சனியோ நமது கர்ம வினைகளுக்கு கொண்டு நீதிபதி ஸ்தானத்தில் தீர்ப்பு வழங்குவார். அதனால் தான் சனி பெயரை கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படுகிறது. கர்ம வினைகளில் இருந்து தப்ப முடியாது என்பதால், பாவங்கள் செய்யாமல் இருப்பதே சனியின் பார்வையில் இருந்து விடுபடும் ஒரே பரிகாரம் ஆகும்.
sani peyarchi 2022
நீதியின் கடவுள் சனீஸ்வரர், இரண்டரை ஆண்டுகளில் ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார் இந்த நேரத்தில் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கான நிலையில் இருக்கிறார். இதையடுத்து, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் மகர ராசியில் முழுமையாக இயல்பு நிலைக்கு மாறுவார். சனியின் நிலை மாற்றத்திற்கு பிறகு சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். அவைகள் எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
sani peyarchi 2022
கடகம்:
கடக ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிக்கப் போகிறார். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்சாதகமானது. இந்த காலகட்டத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
sani peyarchi 2022
துலாம்:
துலாம் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
sani peyarchi 2022
விருச்சிகம்:
புதிய வேலைகளை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலத்தில் தொடங்குவது சரியாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் மங்களகரமானது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இப்போது செய்யலாம், நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். விருச்சகம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
sani peyarchi 2022
மீனம்:
மகர ராசியில் சனி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதே நேரத்தில், நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள். சனியின் சஞ்சாரம் அனைத்து பணிகளிலும் வெற்றியை தரும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் புதிய உயரங்களை அடைய இந்த நேரத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.