Guru Transit 2022: வியாழன் வக்கிர நிலை மாற்றம்..இந்த ராசிகளுக்கு நவம்பர் முதல் ஜாக்பாட் யோகம் அடிக்கப் போகுது!
Guru Transit 2022: வியாழன் வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு வாழ்வில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். அவை எந்ததெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, அது அனைவரின் வாழ்க்கையிலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். கிரகங்களின் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். குரு வக்ர நிலையில் இருப்பது ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கடந்த ஜூலை 29 அன்று குரு பகவான் மீனத்தில் வக்ர பெயர்ச்சி ஆனார். இதையடுத்து, வரும் நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4:35 மணிக்கு குரு பகவான் நேர் இயக்கத்தில் மாறுவார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Sun and Venus Transit
ரிஷபம்:
வியாழன் ரிஷபம் ராசியில் 11வது வீட்டில் பெயர்ச்சியாகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி, புதிய வருமான ஆதாரங்களை ஏற்படுத்தும். தொழில் செய்பவர்களுக்குலாபம் அதிகரிக்கும். நீங்கள் வாகனம், வீடு, சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Sun and Venus Transit
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு பிற்போக்கான குரு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறார். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறலாம். இதனுடன் வியாபாரத்திலும் லாபம் ஈட்டலாம். இந்த ராசிக்காரர்கள் வாகனங்கள், சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாழன் கிரகம் மிதுனத்தின் பத்தாம் வீட்டில் பிற்போக்கானது.
Sun and Venus Transit
கடகம் :
குரு பகவான் வக்கிர நிலையில் இருப்பதால் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவைத் தட்டும். கல்வித் துறையில் தொடர்புடையவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வியாழனின் தாக்கத்தால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.வியாழனின் தாக்கத்தால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் பணியிடத்தில் பாராட்டப்படலாம்.