MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Leftover Rice Dosa: மீதமான சாதம் இருக்கா? 10 நிமிஷத்துல மொறுமொறு தோசை ரெடி!

Leftover Rice Dosa: மீதமான சாதம் இருக்கா? 10 நிமிஷத்துல மொறுமொறு தோசை ரெடி!

Leftover Rice Dosa: இரவில் மீதமான சாதத்தை வீணாக்காமல், வெறும் 10 நிமிடங்களில் ஹோட்டல் சுவையில் மொறுமொறுப்பான ரைஸ் தோசை செய்யும் முறையை இந்த பதிவு விளக்குகிறது.

3 Min read
Author : Raghupati R
Published : Sep 20 2026, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
மீதமான சாதம் தோசை
Image Credit : Gemini AI Generated Image

மீதமான சாதம் தோசை

ராத்திரி மீதமான சாதத்தை என்ன பண்றதுன்னு யோசிக்கிறீங்களா? இனிமே அந்த குளிர்ந்த சாதத்தை குப்பையில போடாதீங்க! வெறும் 10 நிமிஷத்துல, வீட்ல இருக்கிற பொருட்களை வெச்சே ஹோட்டல் ஸ்டைல்ல மொறுமொறுப்பான ரைஸ் தோசை எப்படி சுலபமா செய்றதுன்னு இங்க பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
ரைஸ் தோசை
Image Credit : Gemini AI Generated Image

ரைஸ் தோசை

எல்லார் வீட்லயும் வழக்கமா வர்ற பெரிய பிரச்சனை, ராத்திரி வடிச்ச சாதம் மீதமாகுறதுதான். அடுத்த நாள் அந்த குளிர்ந்த சாதத்தை சாப்பிடவும் முடியாது, தூக்கிப் போடவும் மனசு வராது. இனிமே மீதமான சாதத்தை குப்பையில கொட்டுற தப்பை பண்ணாதீங்க! அதே சாதத்தை வெச்சு சில நிமிஷங்கள்ல நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு மொறுமொறுப்பான (கிரிஸ்பி) ரைஸ் தோசை எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கோங்க. ரொம்ப குறைவான நேரத்துல, சமையலறையில எப்பவும் இருக்கிற பொருட்களை வெச்சே இதை ஈஸியா செஞ்சிடலாம். காலை உணவுக்கு அல்லது சாயங்காலம் சூடான ஸ்நாக்ஸா சாப்பிட இது ஒரு சூப்பரான சாய்ஸ்.

310
தேவையான பொருட்கள்
Image Credit : Shyam Rasoi

தேவையான பொருட்கள்

மீதமான சாதம் - 1 கப்

அரிசி மாவு - 1 கப்

கொஞ்சம் புளித்த தயிர்

தேவையான அளவு உப்பு (சாதத்துல ஏற்கனவே உப்பு போட்டிருந்தா பாத்து சேர்த்துக்கோங்க)

பொடியா நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை சீரகம் - அரை ஸ்பூன்

துருவிய இஞ்சி - கொஞ்சம் (தேவைப்பட்டால்)

எண்ணெய் - தோசை சுட

தண்ணீர் - பதத்திற்கு ஏற்ப

410
மாவு அரைக்கும் முறை
Image Credit : Gemini AI Generated Image

மாவு அரைக்கும் முறை

முதல்ல ஒரு கப் மீதமான சாதத்தை எடுத்து, லேசா கழுவி மிக்ஸி ஜார்ல போட்டுக்கோங்க. இதுகூட ஒரு கப் அரிசி மாவு, கொஞ்சம் புளித்த தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. அப்புறம் தேவையான அளவு தண்ணி ஊத்தி, சாதாரண தோசை மாவு பதத்துக்கு நைசா அரைச்சுக்கோங்க.

510
மசாலா கலவை
Image Credit : Gemini AI Generated Image

மசாலா கலவை

தோசை இன்னும் ருசியா இருக்க, அரைச்ச மாவுல பொடியா நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, சீரகம், துருவிய இஞ்சி சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. இந்த மாவை 15-20 நிமிஷம் அப்படியே ஊற விடுங்க. இதனால மாவு நல்லா செட்டாகி, தோசை மொறுமொறுப்பா வரும்.

610
தோசை சுடும் முறை
Image Credit : Gemini AI Generated Image

தோசை சுடும் முறை

ஸ்டவ்வுல தோசைக்கல்லை வெச்சு சூடாக்குங்க. கல் ரொம்ப சூடா இருந்தா மாவை சரியா தேய்க்க முடியாது, அதனால தீயை கொஞ்சம் குறைச்சுக்கோங்க. இப்போ கரண்டியால மாவை எடுத்து மெலிசா தோசை ஊத்துங்க. சுத்தி கொஞ்சம் எண்ணெய் ஊத்தி, ரெண்டு பக்கமும் பொன்னிறமா (கோல்டன் பிரவுன்) வர்ற வரைக்கும் மொறுமொறுப்பா சுட்டு எடுங்க. (எண்ணெய் கம்மியா வேணுங்கிறவங்க நான்-ஸ்டிக் தவா யூஸ் பண்ணலாம்).

710
சாதம் வைத்து தோசை
Image Credit : Instagram

சாதம் வைத்து தோசை

சுடச்சுட இந்த கிரிஸ்பி ரைஸ் தோசையை வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி அல்லது காரசாரமான தக்காளி சட்னியோட வெச்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கும்போது பச்சை மிளகாயை குறைச்சுட்டு, கொஞ்சம் கேரட் துருவல் சேர்த்தா கலர்ஃபுல்லா இருக்கிறதோட குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.

810
மீதமான சாதத்துல தோசை செய்ய சூப்பர் டிப்ஸ்
Image Credit : Chatgpt

மீதமான சாதத்துல தோசை செய்ய சூப்பர் டிப்ஸ்

இன்னும் மொறுமொறுப்பா வர (Extra Crispiness) மாவு அரைக்கும்போது அரிசி மாவு கூட 1 அல்லது 2 ஸ்பூன் சிரோட்டி ரவை (பாம்பே ரவை) சேர்த்தா தோசை ரொம்ப நேரத்துக்கு மொறுமொறுப்பாவே இருக்கும், சீக்கிரம் நமத்துப் போகாது. தயிர் புளிப்பா இல்லைன்னா, மாவுல அரை மூடி எலுமிச்சை சாறு பிழிஞ்சுக்கோங்க அல்லது ஒரு சிட்டிகை சமையல் சோடா (பேக்கிங் சோடா) சேர்த்துக்கோங்க. இதனால தோசை நல்லா உப்பி, சாஃப்ட் மற்றும் கிரிஸ்பி கலந்த சூப்பர் டேஸ்ட் கொடுக்கும்.

910
மாவு பதம் ஞாபகம் இருக்கட்டும்
Image Credit : Gemini

மாவு பதம் ஞாபகம் இருக்கட்டும்

மாவு ரொம்ப கெட்டியா இருந்தா தோசை தடிமனா ரப்பர் மாதிரி ஆகிடும். ரொம்ப தண்ணியா இருந்தா கல்லுல ஒட்டிக்கும். சாதாரண ரவா தோசையை விட கொஞ்சம் கெட்டியாவும், ரெகுலர் தோசை மாவை விட கொஞ்சம் தண்ணியாவும் இருக்கணும். அரிசி மாவு தோசை சீக்கிரம் கருகிப் போக வாய்ப்பு இருக்கு. அதனால தோசை ஊத்துறதுக்கு முன்னாடி கல்லுல கொஞ்சம் தண்ணி தெளிச்சு, துணி அல்லது வெங்காயத்தால துடைச்சுட்டு, அப்புறம் மாவை ஊத்துங்க.

1010
தீயை மிதமா வைங்க (Medium Flame)
Image Credit : Gemini

தீயை மிதமா வைங்க (Medium Flame)

தோசையை ஹை ஃப்ளேம்ல சுடாதீங்க. மிதமான தீயில (Medium flame) சுட்டா மட்டும்தான் உள்ள நல்லா வெந்து, வெளிய கோல்டன் பிரவுன் கலர்ல கிரிஸ்பியா வரும். தோசைக்கு வெறும் சமையல் எண்ணெய் யூஸ் பண்றதுக்கு பதிலா, சுத்தி கொஞ்சம் வெண்ணெய் அல்லது நெய் தடவினா ஹோட்டல் மசால் தோசை மாதிரி கமகமன்னு வாசனையும் ருசியும் கிடைக்கும். பிரிட்ஜ்ல இருந்து எடுத்த சாதம் கெட்டியா இருந்தா, மிக்ஸியில போடும்போது கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணி ஊத்தி அரைச்சா மாவு ஈஸியா நைசாகிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mosquito Prevention Tips: மழை சீசன் தொடங்கியாச்சு.. வீட்டில் கொசு தொல்லை அதிகரிக்காமல் இருக்க இதை செய்யுங்க!
Recommended image2
Lemon For Dandruff: பொடுகை விரட்ட எலுமிச்சை - தேங்காய் எண்ணெய் மேஜிக்
Recommended image3
குக்கரை கழுவுறீங்களா? அப்போ இந்த ரப்பர் கேஸ்கெட்டை கொஞ்சம் செக் பண்ணுங்க... இல்லனா சிக்கல் வரலாம்!
Related Stories
Recommended image1
Andhra Spicy Chicken: சண்டே ஸ்பெஷல் ! ஆந்திரா ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?
Recommended image2
சிக்கன், மட்டன் பிரியாணிக்கு குட் பை.. இந்த மஷ்ரூம் தொன்னை பிரியாணி டேஸ்ட் வேற லெவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved