Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?
Shape of teeth and personality in tamil: நமது உடலில் மிகவும், முக்கியமான பாகங்களில் ஒன்றான பற்கள் உங்களின் அழகை மட்டும் பிறருக்கு காட்டுவதில்லை, உங்களின் ஆளுமையையும் காட்டுகிறது. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம் வாருங்கள்.
நமது முகத்திற்கு அழகை வழங்குவதில் பற்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அத்தகைய பற்களின் வடிவம் சதுரம், செவ்வகம், ஓவல் மற்றும் முக்கோண நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. பற்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. இதனை தவிர்த்து உங்கள் பற்கள் உங்களின் ஆளுமையைப் பற்றியும் சொல்கிறது. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம் வாருங்கள்.
கூர்மையான பற்கள்
கூர்மையான பற்கள் அதிக புத்திசாலிகளாகவும், அதிக சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் பல தடைகளை முறியடிப்பார்கள். குறிப்பாக கணிதத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மேலும், அதிக பிடிவாத குணம் கொண்டவர்கள். தான் துவங்கும் தொழிலில் தொழிலில் வெற்றி காண்பார்கள்.
குவிந்த பற்கள்
குவிந்த பற்களை உடையவர்கள் மிகவும் ஆளுமை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் எப்போதும் தனது பேச்சுக்கு அடி பணிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களால் சின்ன சின்ன ஏமாற்றங்களை கூட தாங்கி கொள்ள முடியாது. ஆனால், மற்றவர்களை எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். எனவே, இவர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குழி போன்ற பற்கள்:
குழி போன்ற பற்கள் உடையவர்கள் குவிந்த பற்கள் கொண்டவர்களுக்கு அப்படியே, நேர் எதிர் மாறாக இருப்பார்கள்.பொதுவாக இந்த வகையான பற்கள் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடுவது நல்லது. ஏனெனில், இந்த பற்கள் இருப்பது ஒருவரது வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.
சீரற்ற பற்கள்
சீரற்ற பற்கள் கொண்டவர்கள் அதிக அளவு பேராசைக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை பற்றி எளிதில், கணித்து விடுவார்கள். அதற்கு ஏற்ற வகையில் அவர்களிடம் நடந்து கொள்வார்கள்.சுய நலவாதிகளான இவர்கள் மற்றவர்களை எளிதில் காயப்படுத்தி விடுவார்கள்.
கும்பலான பற்கள்
எப்பொழுதும் நேர்மைகுணம் கொண்ட இவர்கள், மற்றவர்களுடன் நல்ல உணர்ச்சி பிணைப்பை வெளிப்படுத்துவார்கள். இவர்களுக்கு கற்பனைத் திறனும், ஆக்க பூர்வமான சிந்தனையும் அதிகமாக இருக்கும். இவர்கள் எந்த ஈகோவும் இன்றி மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடியவர்கள்.புதிய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நண்பர்களை எளிதாக உருவாக்குவார்கள்.
பற்களை விட ஈறுகள் அதிகமிருப்பது
பற்களை விட ஈறுகள் அதிகமிருப்பவர்கள் குடும்ப உறவுகளில், நல்ல உணர்ச்சி பிணைப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனாலும், நண்பர்கள் மீது இவர்கள் அதிக பாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக சீரற்ற வாய்வழி அமைப்பு உள்ளவர்கள் அதிகம் பொய் கூறுவார்கள் என்பதால் இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.