- Home
- Lifestyle
- Impalement: கழுவு ஏற்றுதல் என்றால் என்ன..? தமிழகத்தில் இருந்த கொடூர மரண தண்டனை பற்றி தெரியுமா..?
Impalement: கழுவு ஏற்றுதல் என்றால் என்ன..? தமிழகத்தில் இருந்த கொடூர மரண தண்டனை பற்றி தெரியுமா..?
கழுவேற்றம் (impalement) என்பது தமிழத்தின் பழங்காலத்தில் இருந்த ஒரு கொடூர மரண தண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றிக் கொல்வது.

Impalement
கழுவேற்றம் தொடர்பான ஓவியங்களும், சிற்பங்களும் இன்றும் நம் தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களில் காணலாம். இது குறிப்பாக, அரசை எதிர்ப்பவர்களுக்கும், சமண குலத்தை சேர்ந்த கள்ளர்களுக்கும் வழங்கப்படும் மரண தண்டனையாக இருந்து வந்துள்ளது. சமணர் கழுவேற்றம் என்பது நின்ற சீர் நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும்.
Impalement
அதாவது கழுவேற்றம் (impalement) என்பது, கழுமரத்தில் எண்ணெய் தடவி குற்றவாளியை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் ( கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில்) வைத்து அப்படியே செருகி விடுவார்கள். முதலில், உடல் முழுவதும் எண்ணெய் தடவிய பிறகு கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள் ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் அலறல் சத்தம் போட்டு இறந்து போவான்.
Impalement
இந்த முறையில் இறந்தவர்களின் உடலை இறுதிச் சடங்குகள் செய்து புதைக்கவோ அல்லது எரிக்கவோ மாட்டார்கள். இவர்களின் உடல் அழுகிய நிலையில் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'மூன்றாம் வ்லாட் ட்ராகுலா' என்பவர் கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசரான இவருக்கு, 'கழுவேற்றும் வ்லாட்' (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு.
கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். பழங்காலத்தில் இரும்புக் கழுவும் அல்லது வெங்கழு இருந்தது. இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' உள்ளது என கூறப்படுகிறது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் கழுவேற்ற நிகழ்வுகள் பல்வேறு மாட்டங்களில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்படும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் அங்கு அதை நினைவு படுத்தும் விதமாக கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, காத்தவராயன் கழுவேற்ற விழாவும் இன்று வரை நடைபெற்றுத்தான் வருகிறது. நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.