- Home
- Lifestyle
- kiss day: நடிகையின் அனுமதி கேட்காமலே உதட்டில் முத்தம் கொடுத்தாரா கமல்? பிரபலங்களின் சர்ச்சைக்குரிய முத்தங்கள்!
kiss day: நடிகையின் அனுமதி கேட்காமலே உதட்டில் முத்தம் கொடுத்தாரா கமல்? பிரபலங்களின் சர்ச்சைக்குரிய முத்தங்கள்!
காதலர் வாரத்தின் 7ஆவது நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலங்களின் முத்தங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முத்தத் தினம் காதலர்களுக்கு கூடுதல் கொண்டாட்டமான நாள். ஒவ்வொரு முத்தமும் காதலர்களுக்கு ஒவ்வொரு மாதிரியான நினைவுகளை கொடுக்கின்றன. முத்தங்கள் காமத்தின் கீழ் பார்க்கப்படுவதில்லை. அதை அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கின்றனர். ஆனால் சில முத்தங்களால் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தெரியுமா? அதை இங்கு காணலாம்.
தோழிக்கு உதட்டில் கிஸ் கொடுத்த யாஷிகா
நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்த தோழிக்கு நடிகை யாஷிகா ஆனந்த், கண்கள் மூடி மெய்மறந்தபடி இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்த போட்டோ சர்ச்சைக்குள்ளானது.
ஐஸ்வர்யா ராயின் உதட்டு முத்தம்
கடந்த 2018ஆம் ஆண்டு தன் மகள் ஆராத்யாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த, புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் ஐஸ்வர்யா ராய். அதைப் போலவே கடந்தாண்டும் மகளை உதட்டில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டதால் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் மகளுக்கு கொடுக்கும் முத்தம் காமத்தில் வராது என விடாப்பிடியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டார் என்றே சொல்லலாம்.
ராகுல் காந்தி கொடுத்த பாச முத்தம்
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தன் அன்பு சகோதரி பிரியங்கா காந்திக்கு அன்பொழுக ராகுல்காந்தி முத்தம் கொடுப்பார். இந்த முத்தக்காட்சி அண்ணன் - தங்கை பாச பிணைப்பாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதை கூட உத்தர பிரதேச பாஜக அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் விமர்சித்து பேசினார். ராகுல் காந்தி தனது தங்கைக்கு 50 வயதில் பொது வெளியில் முத்தம் கொடுத்திருப்பது கலாசார மீறல் என்பதாக பேசியிருந்தார்.
கிஸ்ஸால் கிசுகிசு
புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் கமல்ஹாசன் நடிகையின் அனுமதியின்றி முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. புன்னகை மன்னன் படத்தில் நடிக்கும்போது ரேகாவுக்கு 16 வயதுதான். அதில் முத்தக்காட்சி இருப்பதே அவருக்கு தெரியாதாம். கமல் ஹாசன் ரேகாவின் உதட்டில் முத்தமிடும் போது திடுக்கிட்டு விழித்திருக்கிறார் ரேகா. இதை தொடர்ந்து தயாரிப்பாளரிடம் அந்த முத்தக் காட்சியை நீக்க கூட கேட்டுள்ளார். ஆனால் அந்தக் காட்சி செம்மையாக வந்ததால் எடிட் செய்யாமல் பாலசந்தர் பயன்படுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: kiss day: காது மடலில் தொடங்கி கழுத்தில்... வாழ்வில் ஒருமுறையாவது இப்படி முத்தம் கொடுக்கணும்.. ஏன் தெரியுமா?
இதையும் படிங்க: Promise day: ஷாலினி சொல்லுக்கு கட்டுப்பட்டு 21 வருஷம் தாண்டி அஜித் காப்பாத்திட்டு வர்ற சத்தியம் பத்தி தெரியுமா