- Home
- Lifestyle
- Islamic New Year2022: இனிய இஸ்லாமிய புத்தாண்டு 2022: ஹிஜ்ரி புத்தாண்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Islamic New Year2022: இனிய இஸ்லாமிய புத்தாண்டு 2022: ஹிஜ்ரி புத்தாண்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Islamic New Year 2022: உலக முஸ்லிம்கள் கொண்டாடும் 'ஹிஜ்ரி' புத்தாண்டு என்று அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜூலை 29 மாலை அதாவது இன்று மாலை தொடங்கும். இஸ்லாமிய ஆண்டு ‘ஹிஜ்ரி’ என அழைக்கப்படுகிறது.

Islamic New Year 2022
ரமலான், பக்ரீத் பெருநாள்களுக்கு அடுத் தபடியாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஹிஜ்ரி புத்தாண்டு திருவிழாவாகும்.‘ஹிஜ்ரி’ ஆண்டு நபிகள் நாயகம் (சல்) வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும்.
Islamic New Year 2022
இந்தியாவில் ஆங்கில வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, தெலுங்கு வருடப் பிறப்பு, முஸ்லிம்களின் வருடப்பிறப்பு என்ற வழக்கம் நடைமுறையிலிருப்பதை நாம் காணலாம். பெரும்பாலோர் சூரிய சுழற்சியைக் கொண்டு கணித்துள்ளனர். ஆனால் அனைவரிடமும் 12 மாதங்களைகக் கொண்டது ஒரு வருடம் என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை.
Islamic New Year 2022
முஸ்லிம் சந்திர நாட்காட்டியின் முதல் மாதத்தில் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஹிஜ்ரி புத்தாண்டு என்றும் அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜூலை 29 மாலை தொடங்கும். ஆகஸ்ட் 28 அன்று சூரிய அஸ்தமனத்துடன் முடிவடைகிறது. இஸ்லாமியப் புத்தாண்டு மாதமான முஹர்ரம் உழைப்பைப் போற்றும் மாதமுமாகும். உழைப்பை மிகவும் உயர்த்திப் போற்றுவது இஸ்லாம். ஒவ்வொரு முஸ்லிமும் உழைத்தே சாப்பிட வேண்டும். கடுமையாக உழைத்தே ஊதியம் தேட வேண்டும். அந்த உழைப்பு உடல் உழைப்பாகவோ மன உழைப்பாகவோ இருக்கலாம்.
Islamic New Year 2022
பண்டிகையின் முக்கியத்துவம்..?
ஹிஜ்ரி என்ற சொல்லை இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள் அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர்.
Islamic New Year 2022
பின்னர், நபிகள் நாயகம் (சல்) மக்காவிலிருந்து மதீனா நோக்கி ‘ஹிஜ்ரத்’ செய்த நாளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ‘ஹிஜ்ரத்’ என்ற சொல்லுக்கு இடம் மாறிச் செல்லுதல் என்பது பொருளாகும். மக்கா குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து தப்பி, இஸ்லாத்தைப் பரப்ப நபிகள் நாயகம் (சல்) மதீனா சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ ஆகும்.
Islamic New Year 2022
பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது?
பலர் இஸ்லாமிய புத்தாண்டை குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு ஆன்மீக சிந்தனையில் கவனம் செலுத்துகின்றனர். சிலர் இமாம் ஹுசைனின் துன்பத்தை நினைவுபடுத்தும் விதமாக, கைகள், கத்திகள் மற்றும் சங்கிலிகளைப் பயன்படுத்தி சுய கொடியேற்றத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக ஆஷுரா வரையிலான முதல் 10 நாட்களில் நோன்புகள் கடைபிடிக்கப்படுகின்றன. இவ்வாறு புத்தாண்டுப் பெருநாள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலும் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலும் போற்றத்தக்கப் புனித நாளாக கொண்டப்படுகிறது.
மேலும் படிக்க...Sani: சனியின் வக்ர பெயர்ச்சி..அடுத்த 5 மாதம் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள் ..உங்கள் ராசி இதுவா..?
Islamic New Year Greeting,s Happy Islamic New Year Wishe,s Hijri calendar, Hijri New Year, Hijri New Year 1444, Hijri New Year 1444, Start Hijri New Year Date Islam, Islamic calendar, Islamic New Year, Islamic New Year 2022, Islamic New Year Images, Islamic New Year Messages, Islamic New Year Quotes, Islamic New Year WhatsApp Stickers, Islamic New Year Wishes,