MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Idly : தினசரி குழந்தைகள் இட்லி சாப்பிடுவது நல்லதுதானா?

Idly : தினசரி குழந்தைகள் இட்லி சாப்பிடுவது நல்லதுதானா?

தினசரி காலை தோறும் இட்லி சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது தான். ஆனால் குழந்தைகளுக்கு காலை உணவாக தினமும் இட்லியை தருவது குறித்து பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது. பெரியவர்களுக்கு குழந்தைகளை விடவும் ஜீரண சக்தி ஆற்றலுடன் செயல்படும். அதனால் இட்லி எளிதில் அவர்களுக்கு ஜீரணமாகி விடும். 

1 Min read
Author : Dinesh TG
Published : Sep 08 2022, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இட்லியை வெறும் சாதாரண உணவாக பார்த்தால், அதனுடைய பயன் நமக்கு தெரியாது. ஆனால் பிற காலை உணவுகளை விடவும், இட்லிக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இட்லியில் சேர்க்கப்படும் உளுந்து மிகவும் சத்து நிறைந்தது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தேவையானதாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

உடலில் இருக்கும் எலும்புகள் வலு பெற உளுந்து தேவை. எண்ணெய்யில் பொரிக்கப்படாமல், ஆவியில் தயாராகிற உணவு வயிற்றையும் பதம் பார்ப்பது கிடையாது என்பதை தெரிந்துகொள்ளவும். இட்லி மட்டுமில்லாமல், அதற்காக செய்யப்படும் சட்னி, சாம்பார் மற்றும் துவையல் போன்றவற்றிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.
 

35

இட்லியை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் தான் ருசியும் சத்தும். அதை விடுத்து ஜாம், நிலக்கடலை வெண்ணெய் மற்றும் சக்கரையுடன் சாப்பிடுவது உகந்தது கிடையாது. வெறும் அரிசி, உளுந்த கலந்த மாவு என்றில்லாமல் இட்லியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.
 

45

கேரட், பீன்ஸை வெட்டி மாவில் போட்டு, அதனுடன் இட்லி ஊற்றி வேகவைத்து சாப்பிடலாம். மேலும் புதினா, கொத்தமல்லி, பச்சை, இஞ்சி உப்பு சேர்த்து அரைத்து மாவுடன் சேர்த்துவிட வேண்டும். நல்ல பக்குவத்துக்கு வந்ததும், அதை இட்லியாக ஊற்றி வேக்காட்டில் வைத்து எடுக்க வேண்டும். இதுவும் மிகவும் ருசியாகவும் இருக்கும். அதேபோன்று குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
 

55

இட்லியை இட்லியாகவே செய்து சாப்பிடுவதால் சீக்கரம் சலிப்பு ஏற்பட்டுவிடும். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தாலும், பல்வேறு இடங்களிலும் இட்லி எளியதாக கிடைக்கும். அதனால் இட்லியையே வேரைட்டியாக சமைத்து சாப்பிட்டால், எப்போது பார்த்தாலும் இட்லி ஆர்வத்தை ஏற்படுத்தும் உணவாக தெரியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Recommended image2
Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!
Recommended image3
மாடிப்படிக்கு கீழ் காலியாக இருக்கும் இடத்தில் இவ்வளவு பண்ணலாமா? இதோ 7 அசத்தல் ஐடியாக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved