MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெண்டைக்காய் மற்ற காய் மாதிரி இல்ல... முத்தான '3' பலன்கள் தெரியுமா?

வெண்டைக்காய் மற்ற காய் மாதிரி இல்ல... முத்தான '3' பலன்கள் தெரியுமா?

Health Benefits Of Lady's Finger : உடல் ஆரோக்கியமாக இருக்க வெண்டைக்காயை ஏன் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் என இந்த பதில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 05 2024, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Health Benefits Of Lady's Finger in tamil

Health Benefits Of Lady's Finger in tamil

வெண்டைக்காய் மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது. அதனுடைய சுவை மட்டுமின்றி மருத்துவ பயன்களுக்காகவும் பரவலாக அறியப்படுகிறது. வெண்டைக்காய்  சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். இதை சமைத்து உண்பதை விடவும் பச்சையாக சாப்பிடுவதால் பல சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் வெண்டைக்காயை சமைக்காமல் உண்ணும் போது புரதச்சத்து, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் போன்றவை கிடைப்பதாக தெரியவந்துள்ளது.  நாள்தோறும் வெண்டக்காயை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. வெண்டைக்காயை குறித்து நீங்கள் அறியாத பல உண்மைகளை இந்த பதிவில் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Lady's finger nutrition in tamil

Lady's finger nutrition in tamil

வெண்டைக்காயின் ஊட்டச்சத்துகள்: 

வெண்டைக்காயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் சி அதிகமுள்ளது. எலும்புகளுக்கு தேவையானதும், ரத்த உறைதலை ஊக்குவிக்கும் ஆற்றல் கொண்ட வைட்டமின் கே வெண்டைக்காயில் உள்ளது. மெக்னீசியம், ஃபோலேட் ஆகிய சத்துக்களும் காணப்படுகின்றன.   வெண்டைக்காயில் இருக்கும் பாலிபினால்கள் மாதிரியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன. இவை வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.

 எடை குறைப்பு: 

எடையை குறைக்கும் பயணத்தில் வெண்டைக்காய் மிகுந்த உதவியாக இருக்கும். நீங்கள் 100 கிராம் வெண்டைக்காய் உண்ணும் போது அதிலிருந்து 33 கலோரிகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது.  அதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். இதில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை தரக்கூடிய காய்கறிகளில் வெண்டைக்காயும் குறிப்பிட தகுந்தது. வெண்டைக்காய் உடலில் குளுக்கோஸ் அளவை குறைக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும். 

35
Lady's finger health benefits in tamil

Lady's finger health benefits in tamil

வெண்டைக்காய் விதைகள் பற்றி தெரியுமா? 

வெண்டைக்காய் விதைகளை வறுத்து அதில் காபி தயாரிக்க முடியும். போர்க்காலங்களில் காபிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது இந்த விதைகளில் காபி தயாரிப்பார்களாம். இந்த விதைகளில் காபி கொட்டைகளில் உள்ள காஃபின் கிடையாது. ஆனால் வறுத்த வெண்டைக்காய் விதைகளில் தயார் செய்யும் காபி வாசனையாவும் சுவையாகவும் இருக்கும். அதிகளவில் காபி குடிக்கும் நபர்கள் வெண்டைக்காய் விதைகளில் தயார் செய்யும் காபியை குடிக்கலாம். 

இதையும் படிங்க:  வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வச்சி குடிச்சா இத்தனை நன்மைகளா?!

45
Okra health benefits in tamil

Okra health benefits in tamil

பல நோய்க்கு மருந்தாகும் வெண்டைக்காய்! 

வெண்டைக்காயில் உள்ள சளி போன்ற பொருள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடலில் இரத்த அளவை அதிகரிக்க இந்த சளி உதவியாக இருக்கும். வெண்டைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. அதனால் தொண்டை புண், செரிமான பிரச்சினைகளை நீக்க பேருதவி புரியும். நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் உண்பதால் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தை முன்கூட்டியே குறைக்க உதவும்.  
 

55
Lady's finger in tamil

Lady's finger in tamil

இதய ஆரோக்கியம்:  

வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டால் இதய இயக்கத்திற்கு உதவும். வெண்டைக்காயில் காணப்படும் நார்ச்சத்து கரையக்கூடியதாகும். இது நம் உடலில் உள்ள செரிமான மண்டலத்தில் படிந்துள்ள  கொலஸ்ட்ராலுடன் இணைந்து, அங்கிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய செயல்பாட்டிற்கு உதவுகிறது.

இதையும் படிங்க:  முழுபலன்களை பெற வெண்டைக்காய் கூட இந்த '5' உணவுகளை சாப்பிடக் கூடாது!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved