- Home
- Lifestyle
- International Day of the Girl Child: சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா..?
International Day of the Girl Child: சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா..?
International Day of the Girl Child: உலகெங்கிலும் வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2011 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், குழந்தைத் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறை, கல்வி உரிமை மற்றும் பல பிரச்சினைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் பெண் குழந்தைகள் தினம் என்றும் சர்வதேச பெண் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
அதேபோல், மார்ச் 8 அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம், இளம் வயதுப் பெண்களுக்கான அதிக வாய்ப்புகளைத் திறப்பதை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் முக்கியத்துவம், அவர்களில் திறனை வெளி உலகிற்கு உணரவைக்கிறது. பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாயந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும். அதேநேரத்தில், இந்த நாளில் பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும்.