- Home
- Lifestyle
- Horoscope: இந்த 5 ராசி கொண்ட சகோதரிகள் ஒரே வீட்டில் இருந்தால்...அவர்களுக்கு லட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும்
Horoscope: இந்த 5 ராசி கொண்ட சகோதரிகள் ஒரே வீட்டில் இருந்தால்...அவர்களுக்கு லட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும்
Sisters day 2022 special Horoscope: இந்த ஆண்டு தேசிய சகோதரிகள் தினம் ஆகஸ்ட் 7ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பு தொகுப்பாக இன்று எந்தெந்த ராசி கொண்ட சகோதரிகள் ஒரே வீட்டில் இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

astrology
உலகில் உள்ள மற்ற எல்லா உறவுகளையும் விட, சகோதரிகள் எப்போதும் நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர். சகோதரிகள் என்பது கடவுள் கொடுத்த வரம். நாம் வெறுத்து ஒதுக்குவதற்கு அவர்கள் விரோதிகள் அல்ல, நம் குருதிகள். சில சமயங்களில் பெற்றோரை இழக்க நேரிடும் போது, சகோதரிகள் நல்ல தாயாக இருந்து பார்த்து கொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் கொண்ட வீடுகளில் சகோதரி உறவுகள் இல்லையென்பதால், அற்புதமான சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
ஒவ்வொரு சகோதரிகளுக்கும் பெற்றோர் தங்களை வழி நடத்தும் விதம் வைத்து உணர்ச்சி பிணைப்பானது வேறுபட்டிருக்கும். சில சமயங்களில் இராசி பலன்களை வைத்தும் அவர்களின் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில், இந்த 5 ராசி கொண்ட சகோதரிகள் ஒரே வீட்டில் இருந்தால்...அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும், வாழ்வில் செல்வம் பெருகும்...அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
astrology
மிதுனம் மற்றும் விருச்சிகம்
மிதுனம் மற்றும் விருச்சிகம் ராசி கொண்ட சகோதரிகள் பொதுவாக, அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவருமே ஒரே வீட்டில் இருந்தால் லட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும். குடும்பத்தில் சுகபோகங்கள் விரிவடையும். இருவருக்கும் தாயின் ஆதரவு கிடைக்கும். இருவருமே படிப்பில் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள். இந்த நேரத்தில், குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம்.
astrology
சிம்மம் மற்றும் கன்னி:
சிம்மம் மற்றும் கன்னி ராசி கொண்ட சகோதரிகள் ஒரே வீட்டில் இருந்தால் லட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும். இவர்கள் இருவருமே தன்னிசையாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். இவர்களால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இருவருக்கும், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தந்தை தொழிலில் லாப வாய்ப்புகள் அமையும்.
astrology
கும்பம் மற்றும் துலாம்
கும்பம் மற்றும் துலாம் ராசி உடைய சகோதரிகள் எப்பொழும் பிறர் நலனில் அக்கறை செலுத்துவர். இதனால் உங்களுக்கு லட்சுமி தேவி தங்கள் அருள் மழையை பொழிய இருக்கிறார். குடும்பத்தில் திடீர் பண வரவு உண்டாகும். இருவருக்கும் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். இவர்களால் குடும்பத்தில் ஆதரவு இருக்கும்.
astrology
மீனம் மற்றும் மகரம்
இந்த இரண்டு ராசி கொண்ட சகோதரிகள் மென்மையானவர்கள், வாழ்க்கையின் பாதையில் செல்லக் கூடியவர்கள். இவர்கள் குடும்ப எப்போதும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இவர்களுக்கு லட்சுமி வேண்டிய வரத்தை தருவார். இந்த நாளில் நீங்கள் இறைவனை வழிபடுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.