MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hybrid Working: இன்றைய நவீன ஹைப்ரிட் ஒர்க் மாடல், பெஸ்டா இல்லை ஒஸ்டா...சர்வே முடிவுகள் சொல்வது என்ன..?

Hybrid Working: இன்றைய நவீன ஹைப்ரிட் ஒர்க் மாடல், பெஸ்டா இல்லை ஒஸ்டா...சர்வே முடிவுகள் சொல்வது என்ன..?

Hybrid Working: இன்றைய நவீன ஹைப்ரிட் ஒர்க் மாடல், வேலையையும், வாழ்க்கையையும் சரியாக அணுகுவதற்கு சிறந்த ஒன்று தான..? என்பது பற்றி சமீபத்தில் சர்வே நடத்தப்பட்டது. 

2 Min read
Anija Kannan
Published : Jul 31 2022, 12:15 PM IST| Updated : Jul 31 2022, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
work from home

work from home

உலகம் முழுவதும் காரோனோ என்கின்ற பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, பல்வேறு துறைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், ஒர்க் ஃப்ரம் ஹோம்' என்ற வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை ஒரு புதிய வேலை மாடலாக உருவாகியது. பொதுவாக முன்பெல்லாம் அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்யபவர்கள் 8 மணி நேர வேலை என்ற கணக்கில் தனது பணிகளை செய்து முடிப்பார். தற்போது, அதன் நேரம் '' WORK FROM HOME" என்ற வகையில் அதிகரித்து காணப்படுகிறது.  

26
work from home

work from home

ஒரு சில நிறுவனங்கள் அல்லது துறைகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த  '' WORK FROM HOME" தற்போது ஐடி முதல் ஆன்லைன் கல்வி வரை பயன்பாட்டில் உள்ளது. ஒர்க் ஃப்ரம் ஹோம், வீடே அலுவலகமானது. ஆஃபீஸுக்கு கிளம்ப வேண்டாம், ட்ராஃபிக்கில் நிற்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருக்கிறது. இதனால், பல முன்னணி நிறுவங்கள்  வீட்டிலேயே வேலை செய்வதா..? அல்லது அலுவலகமா..? எந்த வகையான வேலை மாடல் அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறது.

36
work from home

work from home

சில நிறுவனங்கள், இரண்டையும் சேர்த்த ஹைப்ரிட் மாடல் சரியாக இருக்கும் என்று முயற்சித்து வருகிறது. ஹைப்ரிட் முறையில், ஊழியர்களை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யச் சொல்கிறது. சமீபத்தில் இதைப்பற்றி ஒரு சர்வே நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க..Monthly Horoscope: இந்த மாதம் ராசி பலன்..ஆகஸ்ட் 1 முதல் 31 ஆகஸ்ட் 2022 வரை, இந்த ராசிகளுக்கு குபேரன் அருள்
 

46
work from home

work from home

தற்போதைய இளம் தலைமுறையினர், கடன் சுமை, தனிமை, வறுமை, தொழில் நஷ்ட்டம், வேலை இழப்பு போன்ற காரணங்கள் மனதளவில் பெரிய பாதிப்புகளில் சிக்கியுள்ளார்கள். அதனால், குறிப்பாக இளம் தொழில் வல்லுநர்களுக்கு, இந்த ''ஹைப்ரிட்'' வேலை மாற்றம் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில் 20 வயதிற்குட்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால், 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 16 முதல் 24 வயதுடையவர்களில் 64 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 25 முதல் 49 வயதுடையவர்களுடன் (65 சதவீதம்) ஆகும். இது 50 வயதுக்கு மேற்பட்டவர்களை விட (48 சதவீதம்) அதிகமாக உள்ளது. 

56
work from home

work from home

இந்த சர்வேயின் படி, கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல முழு நேர வேலை என்பது அசௌகரியமாக இருக்கும் என்பதும், ஹைப்ரிட் மாடல் உடன் ரிமோட் வாய்ப்புகள் தான் சரியாக வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீடு, வாழ்க்கை மற்றும் வேலை ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்க, ஊழியர்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வான வேலை நேரத்தையும், ரிமோட் வேலை செய்யும் ஆப்ஷனையும் விரும்புவதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க..Monthly Horoscope: இந்த மாதம் ராசி பலன்..ஆகஸ்ட் 1 முதல் 31 ஆகஸ்ட் 2022 வரை, இந்த ராசிகளுக்கு குபேரன் அருள்
 

66
work from home

work from home

மேலும், வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதால், உயர் கல்வி, ஹாபி, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, பயணம் என்று பல விஷயங்களில் ஈடுபடுவதை அனைவரும் விரும்புகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க...Masturbation: சுய இன்பத்தின் போது மறந்தும் கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..மிஸ் பண்ணிடாதீங்க..

About the Author

AK
Anija Kannan
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved