MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தைகளை 'இப்படி' கண்டித்தால் மோசமாக தான் வளர்வாங்க... இனிமேல் இதை சொல்லாதீங்க!!

குழந்தைகளை 'இப்படி' கண்டித்தால் மோசமாக தான் வளர்வாங்க... இனிமேல் இதை சொல்லாதீங்க!!

Parenting Mistakes : குழந்தையை கண்டிக்கும்போது பெற்றோர் திட்டுவதால் அவர்களுக்கிடையே உள்ள பிணைப்பு கடுமையாக பாதிக்கும். அதை எவ்வாறு ஆரோக்கியமான வழியில் கையாள வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 19 2024, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Parenting Mistakes In Tamil

Parenting Mistakes In Tamil

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் மாறுபடும். சிலர் குழந்தை தவறு செய்யும்போது திட்டுவார்கள். சிலர் அதற்கு தண்டனை வழங்கி அத்தவறை மீண்டும் செய்யாதவாறு தடுக்க நினைப்பார்கள். ஆனால் இவை சர்வாதிகார அணுகுமுறை ஆகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை கட்டுபடுத்துவதை உறுதிப்படுத்துவதையும், அவர்கள் தங்களுக்கு கீழ்ப்படிதலை உறுதி செய்வதையும் இந்த வழிமுறைகள் நோக்கமாக கொண்டிருக்கிறது.  

இந்த வழிமுறைகளை பின்பற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடத்தையை ஒழுக்கமாக வடிவமைப்பதாக நம்புகிறார்கள். குழந்தைகளின் மோசமான   நடத்தைகளை சரி செய்ய, எதிர்காலத் தவறுகளை முன்கூட்டியே தடுக்க, அவர்களை திட்டுவது தான் ஒரே வழி என நினைக்கிறார்கள். ஆனால் இதனால் மோசமான பாதிப்புகள் தான் ஏற்படும். அவை குறித்து இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Parenting Mistakes In Tamil

Parenting Mistakes In Tamil

எந்த இடத்தில் வைத்து கண்டிக்க வேண்டும்? 

குழந்தையை பொது இடங்களில் வைத்தோ அல்லது பிறர் முன்பாகவோ நெறிப்படுத்த முயற்சி செய்தால் குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் உறவில் பாதிப்பு ஏற்படும். இதனை குழந்தைகள் அவமானமாக கருதுவார்கள். இப்படி செய்யும்போது வெட்கமாகவும், மனதளவில் வேதனையும் அடைவார்கள். தங்களின் சுயமதிப்பீட்டில் குழந்தைகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். தாழ்வு மனப்பான்மை வரலாம்.

இந்த மாதிரி கண்டிக்காமல் தனிப்பட்ட முறையில் தன்மையாக எடுத்து சொல்லும்போது அவர்களுக்குள் நம்பிக்கை, மரியாதை அதிகமாகும். எல்லோர் முன்பும்  பகிரங்கமாக திட்டுவதால்  குழந்தையின் உணர்வுகள் பாதிக்கப்படும். பெற்றோருடனான உறவும் மோசமடையும்.  

36
Parenting Mistakes In Tamil

Parenting Mistakes In Tamil

உடன்பிறப்புகளுடன் மோதல்: 

குழந்தைகள் உடன்பிறந்தவர்களோடு சண்டையிட்டால் அப்போது பெற்றோர் அதனை கவனமாக கையாள வேண்டும். பெற்றோர் குழந்தைகளை ஆக்ரோஷமாக திட்டுவதால் குழந்தைகளுக்கு இடையேயான மோதல் அதிகமாகலாம்.  அவர்களுடைய கோப உணர்ச்சி கட்டுக்குள் வராமல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.  இதனால் சகோதர அல்லது சகோதரி பிணைப்பு பாதிப்புக்கு உள்ளாகும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவது போல அவர்கள் உணர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். ஆகவே குழந்தைகள் உடன்பிறப்புகளோடு சண்டையிடும் போது பெற்றோர் அமைதியாக இருக்க வேண்டும் அவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டையை சாதுரியமாக தீர்ப்பதற்கான விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் ஒருவருக்கொருவர் பச்சாதாபத்தை  ஊக்குவிக்க வேண்டும்.

அவர்களுக்குள் ஆரோக்கியமான உரையாடல்களை எடுத்துக்காட்டாக சொல்லி  தெளிவான எல்லைகளை வகுக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடைய உடன்பிறப்புகளுடன் சுதந்திரமாகச்  சண்டையிட்டு அதனை சுமுகமாக தீர்க்க பாதுகாப்பான சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும். 

46
Parenting Mistakes In Tamil

Parenting Mistakes In Tamil

சின்ன குழந்தைகளை திட்டலாமா? 

ஒன்று முதல் 3 வயது குழந்தைகளை திட்டுவது தவறான செயல்.  இந்த காலகட்டத்தில், குழந்தைகள் எல்லா வார்த்தையையும், உணர்ச்சியையும் அப்படியே உள்வாங்குவார்கள். உங்களுடைய ஆக்ரோஷமான   தொனி குழந்தைகளுக்கு  பயம், பதட்டம், அவநம்பிக்கையை உண்டாக்கலாம். மென்மையாக பேசுவது, பொறுமை, நேர்மறையான விஷயங்கள் இளம் வயதில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர வைக்கும். 

இதையும் படிங்க: பெற்றோர்களே.. உங்க டீன் ஏஜ் மகனிடம் நெருக்கமாக பழக சூப்பர் டிப்ஸ் இதோ!!

56
Parenting Mistakes In Tamil

Parenting Mistakes In Tamil

குழந்தைகளை எதையாவது உடைத்தால் என்ன செய்ய வேண்டும்? 

குழந்தைகள் எதையாவது கீழே கொட்டினால் அல்லது உடைத்தால் உடனே கத்துவதோ, திட்டுவதோ தவறு. இப்படி செய்வதால் அவர்களுக்கு பயமும், பதட்டமும் ஏற்படும். இதனால் இளம் வயதில் மன உளைச்சல் ஏற்படும். குழந்தைகளிடம் சத்தமாக  கத்துவது அவர்களையும் ஆக்ரோஷமான நடத்தையை செய்ய பழக்கிவிடும். ஆகவே நிதானமாக பேச வேண்டும். கீழே கொட்டினால், அது சகஜமானது என புரிய வைத்து அவர்களையும் உங்களுடன் இணைந்து சுத்தம் செய்ய பழக்குங்கள். இதனால் அவர்களுக்கு பொறுப்பு, பச்சாதாபம், சிக்கல்களை தீர்க்கும் திறன் மேம்படும். 

66
Parenting Mistakes In Tamil

Parenting Mistakes In Tamil

விரக்தியில் கத்துதல்: 

அழும் குழந்தைகளை திட்டுவது அவர்களுடைய துயரத்தை மேலும் அதிகமாக்கும். குழந்தைகளின் உணர்வை புரிந்து கொள்வதற்கு  பதிலாக, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் அவர்களுடைய கவலை, பயம் அதிகமாகும். இதனால் குழந்தைகளின் நம்பிக்கை, சுயமரியாதை, வெளிப்படைத்தன்மை பாதிப்படையும். குழந்தைகளிடம் மென்மையான தொனியில் பேசுவது, உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் பாதுகாப்பான உணர்வை வளர்க்கும்.

இதையும் படிங்க:  உங்க மகளுக்கு 10 வயசு ஆச்சா? அப்ப இந்த '6' விஷயங்களை கண்டிப்பா சொல்லி கொடுங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
வாழ்க்கை முறை
பெற்றோர் குழந்தை உறவுகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved