MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Javvarisi kesari: உடல் சோர்வை நீக்கும் ஜவ்வரிசி கேசரி..டக்குனு சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..

Javvarisi kesari: உடல் சோர்வை நீக்கும் ஜவ்வரிசி கேசரி..டக்குனு சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..

Javvarisi kesari recipe Tamil: ஊட்டச்சத்து மிகுந்த இந்த ஜவ்வரிசியை கொண்டு நாம் ஒரு சுவையான கேசரியை எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

1 Min read
Author : Anija Kannan
Published : Sep 18 2022, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் இருந்து, வீட்டின் நிகழும் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த ஜவ்வரிசி இல்லாத உணவுவே இருக்காது. ஜவ்வரிசி நம் உடலில் ஆற்றலை அதிகப்படுத்தும். அது மட்டும் இல்லாமல் இது எலும்புகளுக்கும் ஒரு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இத்தகைய பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஜவ்வரிசியை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

தேவையான பொருட்கள்: 

ஜவ்வரிசி -1 கப் 

சர்க்கரை -1 கப்

ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்புன் 

குங்குமப்பூ -1 சிட்டிகை

முந்திரி -10

உப்பு -தேவையான அளவு 

34

செய்முறை விளக்கம்:

ஜவ்வரிசி ஒரு கப் எடுத்து நன்றாக அலசி, தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரமாவது ஊற வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பின்ச் அளவு குங்குமபூவை எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து விடுங்கள். இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்து விடுங்கள்.

பின்னர் அதே பேனில் தண்ணீர் வடித்து வைத்துள்ள ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். அதன் பிறகு அரை கப் அளவு தண்ணீரை ஊற்றி ஜவ்வரிசியை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

44

ஜவ்வரிசி வெந்து வந்தவுடன் அரைத்து வைத்துள்ள சர்க்கரை பவுடரை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டிக்கொண்டே இருங்கள். சர்க்கரையை சேர்க்கும் போதே மீதம் இருக்கும் நெய்யை இதில் சிறிது சிறிதாக சேர்த்துக் விடுங்கள்.

இத்துடன் ஏலக்காய் தூளையும் போட்டு, தண்ணீரில் கலந்து வைத்த குங்குமப்பூவையும் இதன் மேல் ஊற்றி, கிளறி இறக்கி விடுங்கள். கடைசியாக இறக்கும் போது கேசரி மீது முந்திரியை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான். சுவையான ஜவ்வரிசி கேசரி தயார்..!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்
Recommended image2
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Recommended image3
வாஷிங் மெஷின் Modes-களை சரியாக பயன்படுத்துவது எப்படி? துணிகள் பாழாகாமல் இருக்க இதோ டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved