RBI Currency Update : 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் - புதிய அப்டேட் கொடுத்த ரிசர்வ் வங்கி!
RBI Currency Update : ரிசர்வ் வங்கி, நாட்டில் புழக்கத்தில் உள்ள 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் குறித்த ஒரு புதிய விழிப்புணர்வை வெளியிட்டுள்ளது.
Indian Currency
இன்றைய காலகட்டத்தில், கள்ள நோட்டுகளின் புழக்கம் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. சந்தையில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தான், உண்மையான மற்றும் போலியான நோட்டுகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இது தொடர்பாக சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கள்ள நோட்டுகளின் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகிறது. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, 2020-21ல் ரூ.5 கோடிக்கும் அதிகமான போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரூ.100 நோட்டுகள் தானாம். சரி 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எப்படி நல்ல நோட்டுகள் என்பதை கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
RBI Guidelines
உண்மையான ரூ.100 நோட்டுகளில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன
முதலில் 100 ரூபாய் நோட்டின் இருபுறமும் தேவநாகரியில் ‘100’ என்று தான் எழுதப்பட்டிருக்கும். தேவநாகரி என்பது ஒரு வகை Font (எழுத்து வடிவம்). மேலும் நோட்டின் நடுவில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும். ‘ஆர்பிஐ’, ‘பாரத்’, ‘இந்தியா’ மற்றும் ‘100’ ஆகியவை சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இன்டாக்லியோ பிரிண்டிங்கில் பார்வையற்றோருக்கான அடையாளக் குறி பொறிக்கப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கியின் முத்திரை, உத்தரவாதம் மற்றும் உறுதிமொழி விதிகள் அச்சிடப்பட்டிருக்கும். இறுதியாக அசோக தூண் சின்னம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் அதில் இருக்கும்.
Indian Currency
200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள்
அதிக மதிப்புள்ள நோட்டுகளுக்கு சில தனிப்பட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ரூ.200, 500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதாவது இந்த நோட்டுகளின் "மதிப்பு" மாறும் தன்மை கொண்ட வண்ணங்களால் எழுதப்பட்டுள்ளது. ஒரு தட்டையான மேற்பரப்பில் வைக்கப்படும் போது நோட்டில் உள்ள எண்கள் பச்சை நிறத்தில் தோன்றும். ஆனால் அதுவே நோட்டை சுழற்றும்போது, இலக்கங்கள் நீல நிறத்தில் ஒளிரும். இதை வைத்து நம்மால் எளிதில் அதை வித்யாசம் காண முடியும்.
RBI currency guidelines
500 ரூபாய் நோட்டுகள் தனி சிறப்பு வாய்ந்தது.
நாம் பயன்படுத்தும் 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தின் நிலை மற்றும் திசை மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுகிறது. மேலும் அதில் உள்ள ஆளுநரின் கையொப்பம், உத்தரவாத விதி, உறுதிமொழி விதி மற்றும் RBI லோகோ ஆகியவை வலதுபுறத்தில் அமைந்துள்ளன. இறுதியாக ஸ்வச் பாரத் லோகோ மற்றும் கோஷம் அதில் இடம்பெற்றிருக்கும்.
ஆகையால் இனி உங்களுக்கு 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் ஏற்படும்பொது மேலே கூறிய விஷயங்கள் சரியாக உள்ளதா என்று சரிபாருங்கள்.
போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிக்க 'இப்படி' பண்ணா போதும்!!