MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gardening Tips: துளசி முதல் கறிவேப்பிலை வரை... வீட்டில் ஈஸியா வளர்க்க 5 மூலிகைச் செடிகள்!

Gardening Tips: துளசி முதல் கறிவேப்பிலை வரை... வீட்டில் ஈஸியா வளர்க்க 5 மூலிகைச் செடிகள்!

Gardening Tips: வீட்டில் தோட்டம் வைக்க ஆசையா? ஆனால், பெரிய இடமோ, நேரமோ இல்லையா? கவலைப்படாதீங்க. துளசி, புதினா போன்ற 5 இந்திய மூலிகைகளை ரொம்ப சுலபமாக உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம். அதற்கான சிம்பிள் டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Rayar A
Published : Aug 30 2026, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வீட்டில் ஈஸியாக வளர்க்க 5 மூலிகைச் செடிகள்
Image Credit : AI

வீட்டில் ஈஸியாக வளர்க்க 5 மூலிகைச் செடிகள்

வீட்டில் ஃப்ரெஷ்ஷான மூலிகைகளை வளர்க்க வேண்டும் என்றால், பெரிய தோட்டம் வேண்டும், அல்லது தோட்டக்கலையில் நாம் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்தியாவைச் சேர்ந்த சில மூலிகைகளை சின்ன தொட்டியிலேயே ஈஸியாக வளர்க்க முடியும்.

இது சமையலுக்குத் தேவையான ஃப்ரெஷ் மூலிகைகளைத் தருவது மட்டுமில்லாமல், வீட்டுக்கும் ஒரு பசுமையான அழகைக் கொடுக்கும். அப்படி சுலபமாக வளர்க்கக்கூடிய இந்திய மூலிகைகள் என்னென்ன என்று யோசிக்கிறீர்களா? ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்கூட முயற்சி செய்யக்கூடிய சில செடிகள் குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
துளசிச் செடி
Image Credit : Getty

துளசிச் செடி

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடியை பார்க்கலாம். இது தொட்டிகளில் நன்கு வளரும். போதுமான சூரிய ஒளியும், தண்ணீர் தேங்காத மண்ணும் அவசியம். பழைய இலைகளையும் பூக்களையும் அடிக்கடி கத்தரித்து விட்டால், புதிய வளர்ச்சி அதிகரிக்கும். தொட்டியில் அதிக தண்ணீர் தேங்கினால் வேர் அழுகிவிடும், கவனம்.

துளசிச் செடி ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமின்றி, சிறந்த மூலிகை மருத்துவக் குணங்களையும் கொண்டது. இதன் இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் சளி, இருமல் மற்றும் தொண்டை புண்ணைக் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன. மேலும், வீட்டின் காற்று மண்டலத்தைச் சுத்திகரித்து, கொசுக்கள் போன்ற பூச்சிகளை விரட்டும் இயற்கையான காரணியாகவும் துளசி செயல்படுகிறது.

Related Articles

Related image1
Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் சத்தான தக்காளி வளர்க்க சூப்பரான 4 டிப்ஸ்!
Related image2
Gardening Tips : வீட்டுத் தொட்டியில் எலுமிச்சை வளர்க்க 7 எளிய வழிகள்!
36
கறிவேப்பிலை செடி
Image Credit : instagram

கறிவேப்பிலை செடி

இந்திய சமையலறைக்கு கறிவேப்பிலை செடி ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். இந்த செடிக்கு மிதமான வெப்பமும், நிறைய சூரிய ஒளியும், தண்ணீர் தேங்காத மண்ணும் பிடிக்கும். இளம் செடி வேர் பிடித்து வளர கொஞ்சம் டைம் எடுக்கும், அதனால் பொறுமை அவசியம். தொட்டியில் வளர்த்தால், சூழல் சரியில்லாதபோது வீட்டுக்குள்ள எடுத்து வைக்க வசதியாக இருக்கும்.

செடி அடர்த்தியாகவும் கிளைகள் விட்டுக் கொத்தாகவும் வளர, அதன் நுனிப்பகுதியைத் அவ்வப்போது கிள்ளி விட வேண்டும் . செடிக்கு ஆட்டு உரம், மாட்டு உரம் அல்லது மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்கள் கொடுப்பது இதன் வளர்ச்சியைத் தூண்டும்.

46
புதினா செடி
Image Credit : instagram

புதினா செடி

புதினா ரொம்ப சுலபமாக வளரக்கூடிய இன்னொரு மூலிகை. இது வேகமாக பரவும், அதனால் தொட்டியில் வளர்ப்பதுதான் பெஸ்ட் ஆப்ஷன். மண் லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும், செடிக்கு நல்ல வெளிச்சம் தேவை. ஆனால், அதிக வெயில் காலங்களில் மதிய நேர வெயிலில் இருந்து செடியைப் பாதுகாப்பது நல்லது.

56
கொத்தமல்லி செடி
Image Credit : Others

கொத்தமல்லி செடி

கொத்தமல்லியை சில விதைகளை வைத்தே தொட்டியில் எளிதாக வளர்க்கலாம். வேர் பாதிக்கப்படாமல் இருக்க, ஈரமான, தண்ணீர் தேங்காத மண்ணில் விதைகளை விதைக்க வேண்டும். சூரிய ஒளியும், ஈரப்பதமும் நாற்றுகள் சரியாக வளர உதவும். செடி நன்கு வளர்ந்ததும், இலைகளைப் பறித்து பயன்படுத்தலாம்.

66
வெந்தயக் கீரை
Image Credit : herzindagi

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை வீட்டில் வளர்க்கக்கூடிய கீரை வகைகளில் மிகவும் சுலபமானது. வெந்தய விதைகளை நேரடியாக தொட்டியில் விதைக்கலாம். நல்ல வடிகால் வசதி, போதுமான ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி இருந்தால் போதும், செடி நன்றாக வளரும்.

வெந்தயக் கீரை விதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைக்கத் தொடங்கி, 20 முதல் 25 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். பால்கனி அல்லது சன்னல் ஓரங்களில் சிறிய தொட்டிகளிலேயே இதை எளிதாக வளர்க்கலாம். அடிக்கடி அறுவடை செய்து சமையலுக்குப் பயன்படுத்துவது செடியின் புதிய வளர்ச்சியைத் தூண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tile Cleaning: டைல்ஸில் படிந்த மஞ்சள் கறையா? இந்த 5 வீட்டு வைத்தியம் போதும்!
Recommended image2
Monsoon Hair Care: மழைக்காலத்தில் முடி உதிர்வு, பொடுகைத் தடுக்க உதவும் எளிய கூந்தல் பராமரிப்பு வழிகள்
Recommended image3
Protein Deficiency: ஸ்வீட் சாப்பிட ஆசையா? அடிக்கடி பசிக்குதா? உங்க உடம்புல புரோட்டீன் கம்மியா இருக்கலாம்!
Related Stories
Recommended image1
Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் சத்தான தக்காளி வளர்க்க சூப்பரான 4 டிப்ஸ்!
Recommended image2
Gardening Tips : வீட்டுத் தொட்டியில் எலுமிச்சை வளர்க்க 7 எளிய வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved