MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த மாதிரி குணமுள்ள சொந்தக்காரங்கட்ட உஷாரா இருங்க!! என்ன செய்வாங்க தெரியுமா?

இந்த மாதிரி குணமுள்ள சொந்தக்காரங்கட்ட உஷாரா இருங்க!! என்ன செய்வாங்க தெரியுமா?

Toxic Relatives : போலி உறவினர்களை தள்ளிவைப்பது பல விஷயங்களில் உங்களுக்கு நன்மையை கொண்டு வரும். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 16 2025, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
How to find toxic relatives in tamil

How to find toxic relatives in tamil

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உறவினர்கள் தவிர்க்க முடியாதவர்கள் மகிழ்ச்சியான மற்றும் சோகமான நேரங்களில் அன்பையும் ஆதரவையும் வழங்க உறவினர்கள் உடன் இருப்பார்கள். ஆனால் உங்களுடைய எல்லா சொந்தக்காரர்களும் உங்களுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருவதில்லை. சிலர் எதிர்மறையான எண்ணங்களையும், வருத்தத்தையும் தரக்கூடியவர்கள். இவர்கள் உங்களுடைய மகிழ்ச்சியை கூட பாழாக்கக் கூடியவர்கள். துன்பமில்லாத, அமைதியான நிம்மதியான வாழ்க்கையை நீங்கள் வாழ உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் உறவினர்களை தள்ளி வைக்க வேண்டும். அவர்களை எப்படி மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்கான எல்லைகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
How to find toxic relatives in tamil

How to find toxic relatives in tamil

எதிர்மறை எண்ணங்கள்!! 

உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் உறவினர்களை தள்ளி வைக்க வேண்டும். சிலர் எப்போதும் உங்களுடைய எல்லா விஷயங்களையும் எதிர்மறை கண்ணோட்டத்துடன் காண்பார்கள். உங்களுடைய சொந்த முடிவுகள், வெற்றிகள்,  சந்தோஷம் எதைக் குறித்து நீங்கள் பகிர்ந்து கொண்டாலும் எதிர்மறையான எண்ணங்களை மட்டுமே உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். இந்த எதிர்மறையான உரையாடல்கள் உங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைக்கலாம். இது மன ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்து நிம்மதியை கெடுக்கும். உங்களுடைய அனைத்து தருணங்களிலும் எதிர்மறையாக மட்டும் பேசுபவர்கள் உங்களை குறை கூறுபவர்களை எப்போதும் விலக்கி வைப்பது நல்லது. 

36
How to find toxic relatives in tamil

How to find toxic relatives in tamil

பொறாமை: 

உங்களுடைய வெற்றிகள் மீது சில உறவினர்கள் பொறாமை கொள்வார்கள். ரகசியமாக அவர்கள் பொறாமைப்படுவது சிறுநடவடிக்கைகளில் தெரியும். அவர்கள் உண்மையில் உங்களை நினைத்து சந்தோஷம் அடையாமல் இருந்தால் உங்களுடைய வெற்றியை பெரிதாக கருதமாட்டார்கள். உங்களை குறைவாக மதிப்பிடுவார்கள்.  இதை  நீங்கள் கவனித்தால் அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய விஷயங்களை செய்து முடித்தாலும் அதை குறைவாகவே மதிப்பிட்டு பேசுவார்கள். உதாரணமாக,' ஓ! இதான் நானே பண்ணுவனே.. இது பெரிய விஷயமா?' இதுமாதிரி உங்கள் வெற்றியை கூட குறுக்கிவிடுவார்கள். 

இதையும் படிங்க:  உங்க பார்ட்னருக்கு 'இந்த' விஷயத்தை கொடுக்கலன்னா.. உறவு சீக்கிரமே 'வீக்' ஆகிடும்!! 

 

46
How to find toxic relatives in tamil

How to find toxic relatives in tamil

உங்களை 'பயன்படுத்தி' கொள்வார்கள்! 

உங்களுடைய தாராள குணம் அறிந்து அதனை சில உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். வெறும் உதவிக்காக, உணவு அல்லது பொருள்கள் போன்ற தேவைகளுக்காக மட்டும் உங்களிடம் பேசுவது கவனிக்க வேண்டிய விஷயம்.  உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவாமல், உங்களுடைய தேவைகளை குறித்து சிந்திக்காமல் அவர்களுக்கான விஷயங்களை மட்டும் உங்களிடம் இருந்து பெறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களிடம் ஆரோக்கியமான தூரத்தை கடைபிடிப்பது உங்களுடைய மன நலனுக்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது. இந்த மாதிரி உறவினர்களிடம் அவ்வப்போது 'இல்லை' என்று சொல்வதை கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து உங்களை சுரண்டி அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். 

56
How to find toxic relatives in tamil

How to find toxic relatives in tamil

சுயபித்துள்ளவர்கள்: 
 
தங்களையே புகழ்ந்து தங்களை பற்றி மட்டும் ஆர்வமா இருக்கும் நாசீசிஸ்டு உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பிறர் மீது பச்சாதாபம் கொள்ளாத இது மாதிரியான  தனிநபர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். இவர்கள் பிறரின்  உணர்வுகள், தேவைகளுக்கு மதிப்பளிக்கவேமாட்டார்கள். அவர்களுடைய உரையாடல்கள் ஒருதலைப்பட்சமானது. அவர்களின் சுயநலப் போக்கு உங்களை உணர்ச்சிரீதியாக பாதிக்கும். மனச்சோர்வை ஏற்படுத்தலாம். இந்த உறவினர்களுடன் அளவாக உறவாடுங்கள். நெருக்கமாகவேண்டாம். 

இதையும் படிங்க:  உங்களுக்கு ஏற்ற 'வாழ்க்கைத் துணையை' எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா? 

66
How to find toxic relatives in tamil

How to find toxic relatives in tamil

விமர்சனம் மட்டும் செய்யும் உறவினர்கள்: 

ஒருவரின் முன்னேற்றத்திற்கு உதவும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவை. ஆனால் அக்கறை இல்லாமல் வெறுமனே உங்களை தொடர்ந்து விமர்சிக்கும் உறவினர்களை கொஞ்சம் விலக்கி வைப்பது நல்லது. அவர்கள் உங்களை தாழ்த்தி பேசுவது, உங்களுடைய குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவது என எதிர்மறையாக மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.  உங்களுடைய பலத்தை குறித்து பேச மாட்டார்கள். அவர்களுடைய விமர்சனம் உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை மட்டுமே கொடுத்து உங்களுடைய சுயமரியாதையை கேள்விக்குள்ளாகும். உங்களுடைய ஆரோக்கியமான மனநலனுக்கு இந்த மாதிரி உறவுகளிடம் கொஞ்சம் கவனமாகவும், தூரமாகவும் இருப்பது நல்லது. குடும்பம் என்பது எல்லா உறவினர்களும் சேர்ந்தது தான். ஆனால் சிலர் உங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து எதிர்மறையான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தக் கூடியவர்கள். அவர்கள் உறவினராகவே இருந்தாலும் கூட ஆரோக்கியமான தூரத்தை கடைபிடிப்பது உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved