MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Wooden Spoons Cleaning: மரக்கரண்டி எண்ணெய் பிசுக்கு, வாடையை விரட்ட இந்த 1 மேஜிக் பொருள் போதும்!

Wooden Spoons Cleaning: மரக்கரண்டி எண்ணெய் பிசுக்கு, வாடையை விரட்ட இந்த 1 மேஜிக் பொருள் போதும்!

Wooden Spoons Cleaning: மரக்கரண்டிகள் சீக்கிரமே எண்ணெய் பிசுக்கு பிடித்து, நிறம் மங்கிவிடும். வெறும் தண்ணீரில் கழுவினால் இவை முழுமையாக சுத்தமாகாது. மர கரண்டிகளைப் புதிது போல ஜொலிக்க வைக்கவும், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றவும் இதோ சில டிப்ஸ்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 25 2026, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மரக்கரண்டிகளை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
Image Credit : AI Image

மரக்கரண்டிகளை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்

சமீபகாலமாக கிச்சனில் ஸ்டீல், பித்தளை பாத்திரங்களை விட மரக்கரண்டிகளின் (Wooden Spoons) பயன்பாடு அதிகமாகிவிட்டது. இவை பார்க்க அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். ஆனால், மரப் பாத்திரங்களில் உள்ள ஒரு பெரிய சிக்கல், அவை சீக்கிரமே பொலிவிழந்து, எண்ணெய் பிசுக்கு மற்றும் உணவு வாசனையை உறிஞ்சிக்கொள்ளும். வெறும் சோப்புத் தண்ணீரால் இவற்றை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டீப் கிளீனிங் செய்யுங்கள்
Image Credit : Getty

டீப் கிளீனிங் செய்யுங்கள்

உங்கள் வீட்டு கிச்சனில் உள்ள மரக்கரண்டிகள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க வேண்டுமானால், மாதத்திற்கு ஒருமுறை இந்த 'டீப் கிளீனிங்' முறையைப் பின்பற்றுங்கள். அதற்குத் தேவையான எளிய பொருட்கள் என்னவென்று பார்ப்போம்...  கொதிக்கும் சுடு தண்ணீர். 1-2 ஸ்பூன் பேக்கிங் சோடா. சிறிதளவு தேங்காய் எண்ணெய். ஒரு ஆழமான பாத்திரம் மற்றும் உலர்ந்த துணி.

Related Articles

Related image1
Water Tank Cleaning: வாட்டர் டேங்கை சிரமமின்றி சில நிமிடங்களில் சுத்தம் செய்ய 'ஸ்மார்ட்' டிப்ஸ்!
Related image2
Water Tank: கருப்பா? வெள்ளையா? நீலமா? உங்க வீட்டுக்கு எந்த கலர் வாட்டர் டேங்க் பெஸ்ட்? எது ஆரோக்கியமானது?
35
சுத்தம் செய்யும் முறைகள்
Image Credit : Gemini

சுத்தம் செய்யும் முறைகள்

*முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். இந்த சுடுதண்ணீர், மரத்தின் துளைகளில் மறைந்திருக்கும் பிசுக்கு மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். 

*கொதிக்கும் நீரில் 1-2 ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலக்குங்கள். இந்தக் கரைசலில் மரக்கரண்டிகளைப் போட்டு சுமார் 15-20 நிமிடங்கள் ஊற விடுங்கள். அப்போது கரண்டியில் சேர்ந்திருந்த அழுக்கு தானாகவே வெளியேறிவிடும். 

*தண்ணீரிலிருந்து எடுத்த பிறகு, சுத்தமான நீரில் ஒருமுறை கழுவி, உலர்ந்த துணியால் ஈரம் இல்லாமல் நன்றாகத் துடையுங்கள். மரப் பாத்திரங்கள் முழுமையாக உலர்ந்து போவது மிகவும் முக்கியம்.

45
புதிது போல ஜொலிக்க எண்ணெய் தடவுங்கள்
Image Credit : Getty

புதிது போல ஜொலிக்க எண்ணெய் தடவுங்கள்

மரக்கரண்டி முழுமையாக உலர்ந்த பிறகு, அதன் மீது சில துளிகள் தேங்காய் எண்ணெயை விட்டுத் தேயுங்கள். இது மரத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதுடன், பொலிவிழந்த கரண்டிக்கு புத்தம் புதிய பளபளப்பைக் கொடுக்கும். இது ஒருவித இயற்கை பாலிஷ் போல செயல்படும்.
55
இந்த முன்னெச்சரிக்கைகள் நினைவிருக்கட்டும்
Image Credit : AI Image

இந்த முன்னெச்சரிக்கைகள் நினைவிருக்கட்டும்

மரக்கரண்டிகளை அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்காதீர்கள், இதனால் மரம் வெடிக்கக்கூடும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அவற்றை நன்கு கழுவி உலர வைத்தே எடுத்து வையுங்கள். பிளாஸ்டிக் அல்லது சிலிகான் கரண்டிகளை விட மரக்கரண்டிகள் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை, ஆனால் சரியான சுத்தம் மிக அவசியம். இந்த எளிய கிச்சன் ஹேக்கைப் பயன்படுத்தி உங்கள் சமையலறை மரப் பாத்திரங்களை ஃப்ரெஷ்ஷாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mental Health: ராத்திரி ஆனா மட்டும் ஏன் மனசு பாரமா இருக்கு? சைக்காலஜி சொல்லும் காரணங்கள்.!
Recommended image2
Bracelet Watch: பார்த்தாலே பிடிக்கும் பிரேஸ்லெட் வாட்ச் டிசைன்ஸ்!
Recommended image3
Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!
Related Stories
Recommended image1
Water Tank Cleaning: வாட்டர் டேங்கை சிரமமின்றி சில நிமிடங்களில் சுத்தம் செய்ய 'ஸ்மார்ட்' டிப்ஸ்!
Recommended image2
Water Tank: கருப்பா? வெள்ளையா? நீலமா? உங்க வீட்டுக்கு எந்த கலர் வாட்டர் டேங்க் பெஸ்ட்? எது ஆரோக்கியமானது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved