MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bun dosa : குழந்தைகள் விரும்பும் பன் தோசை!

Bun dosa : குழந்தைகள் விரும்பும் பன் தோசை!

இட்லி அல்லது தோசை மாதிரியே இருக்கும் இந்த பன் தோசையை கொஞ்சம் டிரை பண்ணி பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடும். காலை மற்றும் இரவு நேர உணவுக்கு ஏற்ற இட்லி, தோசையை போலவே இந்த மிகச்சுவையான பன் தோசையும் சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Sep 09 2022, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Bun dosa

Bun dosa

மாவு அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

2 கப் பச்சரிசி

அரை ஸ்பூன் வெந்தயம்

ஒரு கப் அவல்

ஒரு கப் துருவிய தேங்காய்

உப்பு தேவையான அளவு

தாலிப்பதற்கு தேவையான பொருட்கள்

3 ஸ்பூன் எண்ணெய்

தேவையான அளவு கடுகு

ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு

3 பச்சை மிளகாய்

ஒரு கொத்து கருவேப்பிலை

23
Bun dosa

Bun dosa

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி, வெந்தயம் என இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை முற்றிலும் வடிகட்டி கிரைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும். மாவு நன்றாக அரைத்ததும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து வைக்கவும்.

பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் அவல், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

அதை அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

33
Bun dosa

Bun dosa

தோசை மாவு புளித்ததும், தாளிப்பு தயார் செய்ய வேண்டும்.
மாவை தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் பொடி மற்றும் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொரியவிட வேண்டும்.

இந்த தாளிப்பை, தோசை மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, அடுப்பில் வைத்து ஆப்பக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி, ஒரு கரண்டி தோசை மாவை பரப்பாமல் அப்படியே ஊற்ற வேண்டும். ஒரு மூடி வைத்து மிதமான சூட்டில் சுமார் 3 நிமிடங்கள் வேக விடவும். பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் வேக வைக்கவும்.

நன்றாக தோசை வெந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி எடுத்தால் பஞ்சு போன்ற மிருதுவான, சுவையான பன் தோசை ரெடி. இதனுடன், தேங்காய் சட்னி அல்லது சாம்பருடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved