MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Clean Greasy Non-Stick Pan: நான்-ஸ்டிக் பேன் ஓரத்துல இருக்கிற பிசுபிசுப்பு போகலையா? இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க

Clean Greasy Non-Stick Pan: நான்-ஸ்டிக் பேன் ஓரத்துல இருக்கிற பிசுபிசுப்பு போகலையா? இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க

Clean Greasy Non-Stick Pan: நான்-ஸ்டிக் பேனை நாம எவ்வளவுதான் உஷாரா யூஸ் பண்ணாலும், அதோட ஓரங்கள்ல எண்ணெய் பிசுபிசுப்பு ஒட்டிக்கும். வெறும் டிஷ்வாஷ் போட்டு கழுவினா இது போகாது. ஆனா, நம்ம கிச்சன்ல இருக்கிற பொருட்களை வெச்சே இதை ஈஸியா க்ளீன் பண்ணலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 16 2026, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நான் ஸ்டிக் பேன் பிசுபிசுப்பு போகலையா?
Image Credit : gemini ai

நான்-ஸ்டிக் பேன் பிசுபிசுப்பு போகலையா?

நான்-ஸ்டிக் பேனை நாம எவ்வளவுதான் பத்திரமா யூஸ் பண்ணாலும், சமைச்ச பிறகு அதோட ஓரங்கள்ல எண்ணெய் பிசுபிசுப்பு அப்படியே தங்கிடும். டிஷ்வாஷ் லிக்விட் போட்டு கழுவினாலும் இது ஈஸியா போகாது. ரொம்ப அழுத்தி தேய்ச்சா நான்-ஸ்டிக் கோட்டிங் உதிர்ந்துடும். அதனால, கிச்சன்ல இருக்கிற பொருட்களை வெச்சே இந்த பிசுபிசுப்பை நீங்க ஈஸியா க்ளீன் பண்ணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பேக்கிங் சோடா யூஸ் பண்ணும்போது உஷார்
Image Credit : pinterest

பேக்கிங் சோடா யூஸ் பண்ணும்போது உஷார்

வெதுவெதுப்பான தண்ணியில கழுவின பிறகும் பிசுபிசுப்பு அப்படியே இருந்தா, கொஞ்சமா பேக்கிங் சோடாவுல தண்ணி கலந்து பேஸ்ட் மாதிரி செஞ்சுக்கோங்க. இந்த பேஸ்ட்டை பிசுபிசுப்பு இருக்கிற இடத்துல மட்டும் தடவி, கொஞ்ச நேரம் அப்படியே விட்டுடுங்க. அப்புறம் சாஃப்டான ஸ்பாஞ்ச் அல்லது துணியால மெதுவா துடைச்சு எடுங்க. ஆனா பேக்கிங் சோடா போட்டு ரொம்ப அழுத்தி தேய்க்காதீங்க. அப்படி செஞ்சா நான்-ஸ்டிக் கோட்டிங்ல கீறல் விழ வாய்ப்பு இருக்கு.

காபித் தூளை டாய்லெட்டில் போட்டால் இப்படி நடக்கும் தெரியுமா? ஆச்சர்யம் ஆனால் உண்மை!

36
முதல்ல வெதுவெதுப்பான தண்ணியில்
Image Credit : gemini ai

முதல்ல வெதுவெதுப்பான தண்ணியில்

பேனை க்ளீன் பண்றதுக்கு முன்னாடி அது முழுசா சூடு ஆறணும். அப்புறம் பேன்ல வெதுவெதுப்பான தண்ணி ஊத்தி, அதுல கொஞ்சமா மைல்டான டிஷ்வாஷ் லிக்விட் சேர்த்துக்கோங்க. சாஃப்டான ஸ்பாஞ்ச் அல்லது துணியை இந்த தண்ணியில முக்கி, பேன் ஓரத்துல இருக்கிற பிசுபிசுப்பை மெதுவா துடைங்க. பிசுபிசுப்பு ரொம்ப கெட்டியா இருந்தா, 10-லிருந்து 15 நிமிஷம் வரைக்கும் பேனை இந்த தண்ணியில ஊற வைங்க. இதனால பிசுபிசுப்பு சாஃப்ட் ஆகிடும். அப்புறம் ஸ்பாஞ்ச் வெச்சு துடைச்சா பிசுபிசுப்பு ஈஸியா போயிடும்.

46
வினிகர் வெச்சு பிசுபிசுப்பை விரட்டலாம்
Image Credit : Getty

வினிகர் வெச்சு பிசுபிசுப்பை விரட்டலாம்

பேன் ஓரத்துல ஒட்டியிருக்கிற பிசுபிசுப்பை எடுக்க ஒயிட் வினிகர் கூட யூஸ் பண்ணலாம். சரிசமமான அளவுல ஒயிட் வினிகரும் தண்ணியும் மிக்ஸ் பண்ணிக்கோங்க. அதுல சாஃப்டான துணியை முக்கி பேன் ஓரத்தை துடைங்க. ஆனா வினிகரை பேன் மேல ரொம்ப நேரம் அப்படியே விடக்கூடாது. துடைச்ச பிறகு மைல்டான டிஷ்வாஷ் லிக்விட் யூஸ் பண்ணி பேனை மறுபடியும் நல்லா கழுவிடுங்க.

56
ஸ்டீல் ஸ்க்ரப்பர் மட்டும் வேண்டாம்
Image Credit : gemini ai

ஸ்டீல் ஸ்க்ரப்பர் மட்டும் வேண்டாம்

பிசுபிசுப்பு எவ்வளவு கெட்டியா இருந்தாலும் ஸ்டீல் ஸ்க்ரப்பர் வெச்சு தேய்க்கவே தேய்க்காதீங்க. அதேபோல ரொம்ப ஹார்டா இருக்கிற க்ளீனிங் பேட், பவுடர்களையும் யூஸ் பண்ணக்கூடாது. இதெல்லாம் நான்-ஸ்டிக் கோட்டிங்கை வீணாக்கிடும். சாஃப்டான ஸ்பாஞ்ச், மைக்ரோஃபைபர் துணி அல்லது சாஃப்ட் பிரஷ் வெச்சு மட்டும் க்ளீன் பண்ணுங்க.

66
கடைசியா இப்படி பண்ணுங்க
Image Credit : others

கடைசியா இப்படி பண்ணுங்க

பிசுபிசுப்பு முழுசா போன பிறகு பேனை நல்ல தண்ணியில கழுவி, காய்ஞ்ச கிச்சன் டவலால துடைங்க. முக்கியமா பேன் ஓரத்துல தண்ணியோ அல்லது சாப்பாட்டு துகள்களோ தங்காத மாதிரி பார்த்துக்கோங்க. சமைச்ச உடனே பேனை க்ளீன் பண்ணிட்டா பிசுபிசுப்பு தடிமனா படியாது. நான்-ஸ்டிக் பேனை ரொம்ப அழுத்தி தேய்க்காம, வெதுவெதுப்பான தண்ணி, மைல்டான சோப், சாஃப்டான துணி வெச்சு க்ளீன் பண்ணா ரொம்ப நாளைக்கு நல்லா உழைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
எந்த வாசலுக்கு எந்த நிற டோர் மேட் வைத்தால் சிறப்பாக இருக்கும்?
Recommended image2
உயரத்தை அதிகரிக்க இந்த உடற்பயிற்சிகளை இன்றே தொடங்குங்கள்
Recommended image3
பணம், அமைதி, ஆரோக்கியம்: பாசிட்டிவ் எனர்ஜி தரும் இந்த 7 செடிகள் உங்க வீட்டில் இருந்தா போதும்!
Related Stories
Recommended image1
பணம், அமைதி, ஆரோக்கியம்: பாசிட்டிவ் எனர்ஜி தரும் இந்த 7 செடிகள் உங்க வீட்டில் இருந்தா போதும்!
Recommended image2
Coffee Grounds in Toilet: காபித் தூளை டாய்லெட்டில் போட்டால் இப்படி நடக்கும் தெரியுமா? ஆச்சர்யம் ஆனால் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved