உப்புல கூட கலப்படமா? போலி உப்பை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்!!
Salt Purity Test : நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு உண்மையானதா அல்லது கலப்படமானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உப்புல கூட கலப்படமா? போலி உப்பை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்!!
தற்போது எல்லா உணவுப் பொருட்களிலும் போலியானது வந்துவிட்டது. அதாவது நாம் குடிக்கும் பால் முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் வரை என அனைத்து பொருட்களிலும் கலப்படம் கலந்துள்ளது. அந்த லிஸ்டில் தற்போது உப்பும் உண்டு தெரியுமா? உப்பு அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் உப்பு இல்லாமல் எந்தவொரு சமையலும் முழுமையடையாது.
போலி உப்பை கண்டுபிடிக்க
உப்பில் சோடியம் குளோரைடு என்ற ஒரு கனிமம் உள்ளது. எனவே சரியான அளவில் உப்பு எடுத்துக் கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதாவது இது உடலில் நீர் சமநிலையை பராமரிக்கவும், நரம்புகள் சரியாக செயல்படவும், தசைகளை பலப்படுத்தவும் உதவுகிறது. அந்தவகையில், சந்தையில் தற்போது பல வகைகளில் உப்பு கிடைக்கின்றது. எனவே நாம் வாங்கும் உப்பு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் அதிக பணத்தை ஈட்டுவதற்காக உப்பில் கலப்படம் செய்யப்படுகிறது. அப்படி கலப்படம் செய்யப்பட்ட உப்பை வாங்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிங்க: உப்பு காலாவதி ஆகுமா? பலருக்கும் தெரியாத உப்பு பற்றிய உண்மைகள்!!
போலி உப்பு:
போலி உப்பின் எடையை அதிகரிக்கவும் வெள்ளையாக இருக்கவும் மற்றும் அதன் உற்பத்தி செலவுகளை குறைக்கவும் அதில் கலப்படம் சேர்க்கப்படுகிறது. அதாவது வெள்ளை சுண்ணாம்பு, வெள்ளை பொடி, சலவை சோடா, வெள்ளை களிமண் ஆகியவை கொண்டு போலி உப்பு தயாரிக்கப்படுகிறது. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படி கலப்படம் செய்யப்பட்ட இந்த உப்பை போலியானது என்று எளிதில் அடையாளம் காண முடியாது. மேலும் இப்படி தரமற்ற உப்பை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பயன்படுத்தும் உப்பு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது இரண்டு வழிகள் சொல்லி உள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போலி உப்பை கண்டறிவது எப்படி?
1. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். உண்மையான உப்பானது தண்ணீரில் கரைந்து விடும். அதுவே போலியான உப்பு தண்ணீரில் கரைந்தும் தண்ணீரை சற்று வெண்மையாக்கும் மற்றும் கரையாத பிற அசுத்தங்கள் அடியில் படிந்து இருக்கும்.
2. ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி வெட்டப்பட்ட பகுதியில் உப்பை லேசாக தூவி விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். உருளைக்கிழங்கின் நீள நீளமாக மாறினால், அது உண்மையான உப்பு அதுவே நிறம் மாறவில்லை என்றால் அது போலியானது என்று அர்த்தம்.
இதையும் படிங்க: உப்பு வயிற்று புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
போலி உப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
- போலி உப்பில் அதிக அளவு அயோடின் சேர்க்கப்படுகின்றது. இதனால் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
- போலியான உப்பில் அதிக அளவு சோடியம் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் ஏற்படும். இதுதவிர உடலில் கால்சியம் சத்து குறைந்து எலும்பு பலவீனமடையும்.
- கலப்பட உப்பு சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இது தவிர எடை அதிகரிப்பு மற்றும் சோம்பலை ஏற்படுத்தும்.
- கலப்படம் செய்யப்பட்ட உப்பை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது செரிமான அமைப்பு சேதமடையும்.