குழந்தை வளர்ப்பு: வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு சில டிப்ஸ்!
How to balance career with parenting: வேலை மற்றும் குழந்தை வளர்ப்பு இரண்டையும் சமாளிப்பது கடினம். ஆனால் அது அசாத்தியமானது அல்ல. 7 எளிய வழிகளில் இரண்டிற்கும் இடையில் சரியான சமநிலையை பேண முடியும். அது எப்படி என்பதை அறிந்துகொள்ளலாம்.

Parenting tips
பெரும்பாலும் வேலை அழுத்தம் காரணமாக நம் குழந்தைகளின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அதனால் மன நிம்மதியும் கெடுகிறது. தொழில் மற்றும் குழந்தை வளர்ப்பு இரண்டையும் ஒன்றாகச் சமாளிப்பது எளிதானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது. இரண்டையும் சேர்த்துத்தான் சமாளிக்க வேண்டும். எனவே வேலையிலும் குழந்தை வளர்ப்பிலும் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. இரண்டிற்கும் இடையில் சரியான சமநிலையை உருவாக்க உதவும் 7 எளிய வழிகளைப் பார்ப்போம்.
Parenting tips
நிறுவனங்களுக்கு ஒரு விஷன் இருப்பது போல, உங்கள் குடும்பத்திற்கும் ஒரு விஷனை உருவாக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். குடும்பத்துக்கு முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கலாம். ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட திட்டமிடுங்கள். தெளிவான விஷன் இருப்பதால் உங்கள் கவனம் சிதறாது.
Parenting tips
குழந்தைகளுடன் இருப்பதற்கு எப்போதும் மணிக்கணக்கில் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய ஆனால் ஆழமான உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். காலை உணவின்போது சிறிய உரையாடல், அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் ஒரு அன்பான அரவணைப்பு அல்லது தூங்குவதற்கு முன் 5 நிமிடம் பேசிக்கொண்டிருப்பது போன்ற சிறிய தருணங்கள் உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவை வலுப்படுத்த பெரிதும் உதவும்.
Parenting tips
எல்லா வேலையையும் நீங்களே செய்ய வேண்டியதில்லை. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் உதவி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை, அது மளிகைப் பொருட்களை வாங்குவது, குழந்தை பராமரிப்பு அல்லது உணவு தயாரிப்பது என எதுவாக இருந்தாலும் சரி. இது உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை மிச்சப்படுத்தும், அதை உங்கள் குடும்பம் அல்லது உங்களை கவனித்துக் கொள்ள பயன்படுத்தலாம்.
Parenting tips
இப்போதெல்லாம் பல நிறுவனங்கள் பெற்றோருக்கு ஏற்ற வசதிகளை வழங்குகின்றன, பகல்நேர பராமரிப்பு, பெற்றோர் விடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற வசதிகள் உள்ளன. இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு உதவவே உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற பெற்றோருடன் பேசி, அவர்களின் அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
Parenting tips
குழந்தைகள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் முடிவெடுப்பதில் ஈடுபட விரும்புகிறார்கள். வார இறுதி உணவு திட்டமிடல் அல்லது குடும்ப வெளியூர் பயணம் என எதுவாக இருந்தாலும், அவர்களையும் முடிவெடுக்க அனுமதியுங்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக உணர்வது மட்டுமல்லாமல், முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்வார்கள்.
Parenting tips
எந்தவித இடையூறுமின்றி பெற்றோராக நீங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். உதாரணமாக, அலுவலக வேலை எதுவும் இல்லாத, முழு கவனமும் குடும்பத்தில் மட்டுமே இருக்கும் மாலை வேளையில் இரண்டு மணிநேரத்தைத் இதற்காக ஒதுக்கலாம். அதேபோல், எந்தவித இடையூறுமின்றி உங்கள் வேலையில் கவனம் செலுத்தக்கூடிய நேரத்தையும் ஒதுக்குங்கள். இது உங்கள் பணியில் சிறப்பாகச் செயல்படுவதற்கும் உதவுவதுடன், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலையில் வைத்திருக்க முடியும்.
Parenting tips
குழந்தை வளர்ப்பிலும் வேலையிலும் சமநிலையைப் பராமரிக்க, நீங்கள் உங்களையும் கவனித்துக்கொள்வது அவசியம். உங்கள் தனிப்பட்ட நலனுக்கு முன்னுரிமை தருவதில் எந்தத் தவறும் இல்லை. வேலையின்போது சில நிமிட இடைவேளை எடுப்பது, யோகா செய்வது அல்லது ஏதேனும் பொழுதுபோக்கில் ஈடுபடுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.