ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு முகேஷ் அம்பானி, நீதா அம்பானி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு எவ்வளவு செலவு ஆனது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Anant Ambani - Radhika Merchant Wedding Cost
உலகின் மிக ஆடம்பரமான திருமணங்களில் ஒன்றை ஏற்பாடு செய்ய என்ன தேவை என்று எப்போதாவது யோசித்தீர்களா? நாம் யோசித்திருப்போம். எப்போது தெரியுமா? இப்போது தான். அதற்கு காரணம் வேறு யாருமில்லை, அம்பானி குடும்பம் தான். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் உலகம் முழுவதும் பேசுபொருளானது.
Anant Ambani
இந்த கொண்டாட்டத்திற்கு எவ்வளவு செலவானது? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ஜூலை 12, 2024 அன்று ராதிகா மெர்ச்சண்டை மணந்தார்.
Radhika Merchant
கடந்த ஆண்டு டிசம்பரில் நாததுவாராவில் நிச்சயதார்த்தத்துடன் தொடங்கிய இவர்களது திருமணம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். இந்த திருமணம் வெறும் விழாவாக இல்லை. அது ஏழு மாத கால கொண்டாட்டமாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் மற்றும் வணிக அதிபர்கள் என எல்லாருமே கூடியிருந்தனர்.
Anant - Radhika
திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோர் தங்களது நடிப்பிற்காக முறையே ரூ.74 கோடி மற்றும் ரூ.84 கோடி வசூலித்தனர். முகேஷ் அம்பானி இந்த திருமண கொண்டாட்டத்திற்கு 5000 கோடி ரூபாய் செலவு செய்தார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
Reliance
மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் பில் கேட்ஸ் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்ட மார்ச் மாதம் முதல் திருமணத்திற்கு முந்தைய விழாவிற்கு மட்டும் ரூ. 1000 கோடி செலவானது என்று கூறுகிறார்கள். இந்த ஆடம்பர நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜாம்நகரில் சுமார் 350 தனியார் விமானங்கள் வந்தன.
Mukesh Ambani
இது ஒன்றே போதும் அதன் பிரம்மாண்டத்திற்கு சான்றாக இருக்கும். மே 28 முதல் ஜூன் 1 வரை கப்பலில் நடைபெற்ற இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய விருந்து கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வுக்கு மட்டும் கூடுதலாக ரூ. 500 கோடி செலவானது.
Anant Ambani Wedding
மொத்தத்தில் முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்திற்காக 6500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இந்தத் தொகை பெரிதாக இருந்தாலும், சமீபத்தில் நிகர சொத்து மதிப்பு $121 பில்லியனாக உயர்ந்த ஒரு மனிதனுக்கு இது கடலில் ஒரு துளி தான்.
ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?