MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பேருந்தில் 'மது' கொண்டு போகலாம்.. ஆனா 'இந்த' அளவுக்கு மேல இருந்தால் அபராதம்!! எவ்வளவு தெரியுமா? 

பேருந்தில் 'மது' கொண்டு போகலாம்.. ஆனா 'இந்த' அளவுக்கு மேல இருந்தால் அபராதம்!! எவ்வளவு தெரியுமா? 

Alcohol Limit In Bus Travel : பேருந்தில் எவ்வளவு மதுவை கொண்டு செல்ல வேண்டும், மீறினால் என்ன தண்டனை என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 02 2024, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Alcohol Limit In Bus Travel In Tamil

Alcohol Limit In Bus Travel In Tamil

இந்தியாவில் மது அருந்துபவர்கள் கணிசமாக உள்ளனர். இந்தியாவில் மது விருப்பம் உள்ளவர்களில் ஒருவர், சராசரியாக 5.7 லிட்டர் மது அருந்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பண்டிகை நாளில் மது விற்பனை உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்திய மாநிலங்களில் மதுவிற்பனையும் அதன் விலையும் மாறுபடுகிறது.   பல மாநிலங்களில் விலை அதிகமாகவும், சில மாநிலங்களில் குறைவாகவும் காணப்படுகிறது. ஆனால் எந்த விலையாக இருந்தாலும் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. 

25
Alcohol Limit In Bus Travel In Tamil

Alcohol Limit In Bus Travel In Tamil

மதுவின் விலை குறைவாக இருக்கும் மாநிலங்களில் இருந்து சிலர் மதுவை வாங்கி கொண்டு தங்கள் ஊருக்கு செல்வார்கள். இப்படி மதுவை பேருந்தில் கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டா என்பது குறித்தும் பலருக்கு தெரிவதில்லை. பேருந்தில்  மதுபாட்டில்களை கொண்டு செல்லலாமா? எத்தனை பாட்டில்களை கொண்டு செல்லலாம்? என்பதை குறித்து இங்கு காணலாம்.  

இதையும் படிங்க:  வீட்டில் எவ்வளவு மதுபானங்களை வைத்திருக்கலாம் தெரியுமா.. தமிழ்நாட்டுல எவ்வளவு லிமிட்?

35
Alcohol Limit In Bus Travel In Tamil

Alcohol Limit In Bus Travel In Tamil

பேருந்தில் மது பாட்டில்களை கொண்டு செல்ல இந்தியாவில் தனி விதிகள் உள்ளன. இதனை கடைபிடித்து மதுவை கொண்டு சென்றால் அதில் சிக்கலில்லை. இந்த மாதிரி மதுவிலக்கு இல்லாத மாநிலங்களில் தான் கொண்டு செல்ல அனுமதி. மற்ற மாநிலங்களில் கொண்டு செல்ல முடியாது. 

இந்தியாவில் சில மாநிலங்களில் மதுவை கொண்டு செல்லவும், விற்கவும் தடை உள்ளது.   மதுவிலக்கு இல்லாத மாநிலங்களில் இரண்டு லிட்டர் வரை மதுவை கொண்டு செல்லலாம். இந்த அளவுக்கு மேல் மதுவை கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம்.  அதுமட்டுமின்றி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உங்களுக்கு விதிக்கப்படலாம். 
 

45
Alcohol Limit In Bus Travel In Tamil

Alcohol Limit In Bus Travel In Tamil

நடத்துநர் அனுமதி: 

விலைகுறைவான மதுபானங்களை வாங்கி அவற்றை மற்றொரு இடத்திற்கு குறைந்த செலவில் கொண்டு செல்ல பேருந்து நல்ல தேர்வாக இருக்கும்.  ஆனால் பேருந்து நடத்துநர் நீங்கள் மது கொண்டு வருவதற்கு மறுப்பு தெரிவித்தால் அப்போது உங்களால் கொண்டு செல்ல முடியாது. ஏனென்றால் பேருந்து நடத்துநர் மறுத்தால் மதுவை கொண்டு செல்ல கூடாது என விதி உள்ளது.  

இதையும் படிங்க:  மதுபான கடைகளில் உப்பு வேர்க்கடலை சைடிஷாக கொடுக்க இப்படி ஒரு காரணமா?  

55
Alcohol Limit In Bus Travel In Tamil

Alcohol Limit In Bus Travel In Tamil

செல்லுபடியாகும் பில்: 

பேருந்தில் மதுவை கொண்டு செல்ல விரும்பும்பட்சத்தில்  செல்லுபடியாகும் பில்லை வைத்திருப்பது அவசியம். நீங் மதுபாட்டிலை வாங்கியதற்கான தகுந்த ஆதாரத்தைக் காட்டுவது முக்கியம். முறையான பில் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை கவனமாக செயல்படுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
மது பாட்டில்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved