- Home
- Lifestyle
- Horror places: இந்தியாவில் இருக்கும் திகிலூட்டும் அமானுஷ்ய இடங்கள்..இதுவரை நீங்கள் போய் பார்த்தது உண்டா..?
Horror places: இந்தியாவில் இருக்கும் திகிலூட்டும் அமானுஷ்ய இடங்கள்..இதுவரை நீங்கள் போய் பார்த்தது உண்டா..?
Horror places: நீங்கள் திகிலூட்டும் அமானுஷ்ய அனுபவங்களை பெற விரும்பினால் இந்தியாவில் இருக்கும் இந்த 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

horror_place
இந்த உலகில் கடவுள் இருப்பது உண்மை, என்றால் பேய், பிசாசுகள் இருப்பது உண்மையாகும். நல்ல சக்தி என்ற ஒன்று இருந்தால், தீய சக்திகள் நிச்சயம் இருக்கும். நாம் சிறுவயதில் இருந்தே பார்த்த படங்கள், பாடல்கள் வைத்து அமானுஷ்யம் நம்முடைய கண் முன்னே வந்து செல்வது போன்று பிம்மம் தோன்றும் என்கிறார்கள். பேய், பிசாசுகள் உண்மையில் இருக்கிறதோ, இல்லையோ இந்தியாவில் அமானுஷ்ய இடங்கள் என்று சில இடங்கள் சொல்லப்படுகிறது. எனவே,நீங்கள் திகிலூட்டும் அமானுஷ்ய அனுபவங்களை பெற விரும்பினால் இந்த இடங்களுக்கு சென்று சுற்றி பாருங்கள்.
horror_place
எனவே, இந்தியாவில் இருக்கும் திகிலூட்டும் அமானுஷ்ய இடங்கள்..பற்றிய தொகுப்பை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
1 ராஜஸ்தானில் உள்ள பாங்கார்க் கோட்டை
இந்த கோட்டை இந்தியாவின் மிகவும் பிரபலமான பேய் நகரங்களில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலி ரிசர்வ் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கோட்டையில் இரவு நேரங்களில் யாரோ நடனமாடுவது போன்றும், கத்துவது போன்றும் சத்தங்கள் வருவதாக அந்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் சென்ற பலர் இதுவரை வெளிவரவில்லை என்றும் தக்வல்கள் கூறப்படுகிறது.
horror_place
2. குல்தரா கிராமம்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, குல்தாரா நகரம் பாலியில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறிய பாலிவால் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது. இந்த மாநிலத்தின் முதல்வர், கிராமத் தலைவரின் மகளை காதலித்து, அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினார். முழு கிராமமும் இதனை தடுத்து, அந்த பெண்ணை காப்பாற்ற அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, இனி ஒருபோதும் யாரும் இந்த ஊரில் குடியிருக்கக்கூடாது என்று சபித்தனர். ஒருவேளை அந்த ஊரில் யாரும் இரவைக் கழிக்கவோ அல்லது குடியேறவோ துணிந்தாலும், அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார் என்று புராணங்கள் கூறுகின்றது.
horror_place
3. மேற்கு வங்க டோ ஹீல்:
மேற்கு வங்கத்தில் உள்ள குர்சியோங் பகுதியில் உள்ள விட்டோரியா உயர்நிலை பள்ளிஒன்றில் பல அமானுஷ்யங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் இரவில் சென்ற யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நிறைய பிணங்களின் உடல்களை கண்டெடுத்தால் இப்படி மக்கள் கருதி வருகின்றனர்.ன உயிர்களை மூழ்கடித்துள்ள ஒரு பயங்கரமான இந்த கடற்கரை ஆகும்.
horror_place
4. முசோரியில் உள்ள லம்பி தேஹார்:
உத்தரகண்ட் மாநிலத்தில் முசோரி என்கிற இடத்தில் இந்த லம்பி தேஹார் சுரங்கங்கள் உள்ளன. இங்கு சுண்ணாம்பு அதிகம் கிடைத்து வந்தது. ஆனால், இந்த பகுதியில் பல்வேறு விபத்துகள் நடந்ததால் தற்போது இது செயல்படாமல் உள்ளது. இங்கு ஏராளமான உயிரிழப்புகள் மர்ம மரணமாக நிகழ்ந்துள்ளன.
india horror places
5. குஜராத்தில் உள்ள டூமாஸ் பீச்
குஜராத்தில் உள்ள டுமாஸ் கடற்கரை அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். புராணக்கதை என்னவென்றால், கடற்கரை எண்ணற்ற எண்ணிக்கையிலா