MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சுகர் நோயாளிங்க காலைல சாப்பிடலன்னா உடம்புல என்ன நடக்கும் தெரியுமா?

சுகர் நோயாளிங்க காலைல சாப்பிடலன்னா உடம்புல என்ன நடக்கும் தெரியுமா?

Diabetes and Breakfast : சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். இல்லையெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 20 2025, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Diabetes and Breakfast in Tamil

Diabetes and Breakfast in Tamil

சர்க்கரை நோயாளிகள் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஏனெனில் சீரான ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. நன்கு சீரான காலை உணவானது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமின்றி நாள் முழுவதும் ரத்த சர்க்கரையில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தடுத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.  ஒருவேளை சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் ரத்த சர்க்கரை அதிகரிக்க செய்யலாம் மற்றும் நீண்டகால சிக்கலின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Diabetes and Breakfast in Tamil

Diabetes and Breakfast in Tamil

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு சீர்குலையும்:

சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் நாளின் பிற்பகுதியில் ரத்த சர்க்கரை அளவு உயரலாம். பிறகு சாப்பிடும் உணவுகள் மிகவும் வலுவான குளுக்கோஸ் அளவை தூண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் காலப்போக்கில் கிளைசெமிக் மாறுபாட்டை அதிகரிக்கும். இதனால் ஆரோக்கிய மோசமாக பாதிக்கப்படும்.

மோசமான இன்சுலின் எதிர்ப்பு:

இன்சுலின் எதிர்ப்பு, அதாவது டைப் 2 நீரிழிவு நோயாளியின் இன்சுலினை திறம்பட பயன்படுத்த உடலின் திறன் தடுக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் இன்சுலின் எதிர்ப்பு மோசமாகும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன மேலும் குளுக்கோஸ் ஒழுங்கு முறையையும் சவாலாக்கும். இது தொடர்ந்து நீடித்தால் சர்க்கரை நோயாளியின் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

35
Diabetes and Breakfast in Tamil

Diabetes and Breakfast in Tamil

நீண்டகால அபாயங்கள்:

சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் நாள்பட்ட உயர் ரத்த சர்க்கரை அளவுகள் ஆபத்தை அதிகரிக்கும். இது தொடர்ந்து நீடித்தால் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

இதையும் படிங்க: இஞ்சி டீயா? இல்லங்க.. இலவங்கப்பட்டை 'டீ' குடிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு  தான் இவ்ளோ நன்மைகள்!!

45
Diabetes and Breakfast in Tamil

Diabetes and Breakfast in Tamil

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்றத்தாழ்வு:

நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. ஒருவேளை இந்த உணவுகளை தவிர்த்தால் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை சீர்குலைந்து எடை அதிகரிப்பு வழிவகுக்கும். 

உளவியல் தாக்கம் ஏற்படும்:

சர்க்கரை நோயாளிகள் காலை உணவு தவிர்ப்பது வெறும் உடல் சார்ந்தவை அல்ல உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலையற்ற ரத்த சர்க்கரை அளவுகளின் விளைவாக மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இது தவிர அதிகப்படியான பசியால் மோசமான உணவுகளை சாப்பிட தூண்டும், மேலும் கவனம் சிதறல் ஏற்படும்.

55
Diabetes and Breakfast in Tamil

Diabetes and Breakfast in Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியமான காலை உணவுகள்:

ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டை மேம்படுத்த சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதாவது:

- முழு தானியங்கள், ஓட்ஸ் போன்ற குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கார்ப்கள், சக்தியை சீராக வெளியிடுகிறது.

- முட்டை, தயிர், டோஃபு போன்ற ஒல்லியான புரதங்கள் ரத்த சர்க்கரையை நிலை நிறுத்துகிறது.

- அவர்காடு நட்ஸ்கள் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நீடித்த ஆற்றலை வழங்குகின்றது.

- காய்கறிகள் அல்லது சியா சியா விதைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானம் மற்றும் திருப்தியை ஊக்குவிக்கிறது.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத 6 உணவுகள்..  காரணம் இதுதான்!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(19.2 ov)216/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Recommended image2
Wedding Invitation : பழைய கல்யாணப் பத்திரிகைகளைத் தூக்கிப் போடாதீங்க! மீண்டும் பயன்படுத்த 10 ஐடியாக்கள்!
Recommended image3
Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved