MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Lifestyle
  • siblings day 2023 : இரத்தத்தின் இரத்தமே இனிய உடன்பிறப்பே...! உடன்பிறப்புகள் தின வரலாறும்... பின்னணியும்

siblings day 2023 : இரத்தத்தின் இரத்தமே இனிய உடன்பிறப்பே...! உடன்பிறப்புகள் தின வரலாறும்... பின்னணியும்

உடன்பிறப்புகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதன் வரலாறு மற்றும் அதன் பின்னணியை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 10 2023, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உடன்பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உடன்பிறப்புகள் தினம் கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை சேர்ந்த கிளவுடா எவர்ட் தான். அமெரிக்காவின் மான்ஹட்டனை சேர்ந்தவரான கிளவுடா எவார்ட் என்பவர் தனது உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்துவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அவர்கள் மீது அதீத பாசம் வைத்திருந்த கிளவுடா, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாளை நிறுவினார். இதற்காக கடந்த 1995-ம் ஆண்டு உடன்பிறப்புகள் தின அறக்கட்டளையை கிளவுடா தொண்டு நிறுவனமாக நிறுவியதோடு மட்டுமல்லாமல் இந்த நாளை அங்கீகரிக்க அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்... Ponniyin selvan 2 : அஜித் படத்தால் முடிவை மாற்றிய லைகா... பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

34

அவரின் இந்த முயற்சியின் பலனாக அமெரிக்காவின் 49 மாகாண ஆளுநர்கள், அதிபர்கள் புஷ், ஒபாமா, கிளிண்டன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் இதனை ஆமோதித்தனர். இதன்பின்னரே உடன் பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கிளவுடாவின் ஆசையாக இருந்தது. அது ஆரம்பத்தில் நடக்காவிட்டாலும், தற்போது இந்த உடன்பிறப்புகள் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

44

பிறப்பு முதல் இறப்பு வரை உடனிருக்கும் ஒரே உறவு உடன்பிறப்புகள் தான். அத்தகைய உறவை கொண்டாடும் தினமான இன்று உடன்பிறப்புகளை சந்தித்து அவர்களுடன் தங்களது பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தும், அவர்களை உணவகத்திற்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தும் கொண்டாடலாம். ஏராளமானோர் உடன் பிறப்புகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Razor Blade: ரேஸர் பிளேடில் இருக்கும் அந்த ஓட்டை எதற்காக? தெரிந்தால் பிளேடை வேற மாதிரி பார்ப்பீங்க
Recommended image2
Lunch Box Recipes: திங்கள் முதல் வெள்ளி வரை...5 நாட்களுக்கு ஏற்ற 5 லஞ்ச் பாக்ஸ் ரெசிபி
Recommended image3
Manchurian Fried Rice: சுவையான மஞ்சூரியன் ஃபிரைட் ரைஸ் செய்முறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved