Haiti : பசியைப் போக்க மண் ரொட்டி சாப்பிடும் மக்கள்.. யார் இவர்கள்? ஏன் இந்த நிலை?
Haiti : உலகிலேயே மிகவும் ஏழ்மையான இந்த நாட்டில் கடும் உணவுத் தட்டுப்பாட்டால் மக்கள் மண்ணால் ரொட்டி செய்து சாப்பிடுகிறார்கள்! கோதுமை மாவு வாங்க முடியாமல் மண்ணையே உணவாக்கிய அந்த நாடு எது? முழு விவரம் இதோ!

பசிக்காக மண்ணால் ரொட்டி சுடும் மனிதர்கள்!
உலகில் பல பணக்கார நாடுகள் செல்வச் செழிப்பில் திளைக்க, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாமல் தவிக்கும் ஏழை நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆடம்பர வாழ்க்கைக்கும், இரண்டு வேளை உணவிற்கே போராடும் வறுமைக்கும் இடையிலான இடைவெளி பல நாடுகளில் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு பரிதாபகரமான நிலையில் இருக்கும் நாடு தான் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹெய்ட்டி (Haiti). கடும் வறுமை, பொருளாதாரச் சீரழிவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் ஹெய்ட்டி நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் ஏழை மக்களின் நிலை எந்த அளவிற்கு பரிதாபமாக மாறியுள்ளது என்றால், தங்களின் அன்றாடப் பசியைப் போக்க அவர்கள் மண்ணால் செய்யப்பட்ட ரொட்டிகளை (Mud Cakes) உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வழக்கமான உணவுப் பொருட்களையோ அல்லது கோதுமை மாவையோ வாங்க முடியாத அளவிற்குப் பொருளாதார ரீதியாக முடங்கியுள்ள மக்கள், மஞ்சள் களிமண், உப்பு மற்றும் காய்கறி எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ரொட்டி போல தட்டி, வெயிலில் காயவைத்து உணவாகச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக வறுமையின் பிடியில் கடுமையாகச் சிக்கியுள்ள கிராமப்புறங்களில் இந்த அவல நிலை தொடர்கிறது.
இதையும் படிங்க : Sunroof Cars : ரூ.10 லட்சத்துக்குள் சன் ரூஃப் வசதியுடன் கிடைக்கும் சிறந்த கார்கள்!
கடும் விலைவாசி உயர்வு
ஹெய்ட்டியில் உள்ள சிட்டி சோலைல் பகுதியில் வறுமை கடுமையாக உள்ளது. இங்கு சிலர் மதிய உணவுக்கு கூட சரியான உணவு வாங்க முடியாமல் தவிக்கின்றனர். கோதுமை, அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், ஏழைக் குடும்பங்களுக்கு உணவு எட்டாக்கனியாக மாறியுள்ளது. இதனால் பசி தாங்க முடியாமல் மண்ணால் செய்த ரொட்டிகளை சாப்பிடுகின்றனர். இதற்காக மலைப்பகுதிகளில் உள்ள மென்மையான மண்ணைக் கொண்டு வருகின்றனர். இந்த மண் ரொட்டியை அங்கு 'பான் பான் டே' என்று அழைக்கின்றனர். சரியான சத்தான உணவு கிடைக்காமல், அங்குள்ள மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை காரணமாக மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்களும் உள்ளன. இந்த நிலையைப் பார்த்தால், அங்குள்ள மக்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக உள்ளது என்பது புரியும்.
இதையும் படிங்க : House : நீச்சல் குளத்துடன் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்? சீப் அண்ட் பெஸ்டா கட்டி முடிக்க என்ன செய்ய வேண்டும்?
மண் ரொட்டி தயாரிப்பது எப்படி?
இந்த மண் ரொட்டிகளை எப்படி தயார் செய்கிறார்கள் தெரியுமா? மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில், தண்ணீர் மற்றும் உப்பு கலந்து முதலில் மாவு போல தயார் செய்கிறார்கள். பின்னர் அதை ரொட்டி வடிவில் தட்டி, சில மணி நேரம் வெயிலில் காய வைக்கின்றனர். முழுமையாக காய்ந்த பிறகு, அதன் மீது சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிடுகிறார்கள். இவற்றை மண் குக்கீஸ் என்றும் அழைக்கின்றனர். ஆனால், இவை சத்தான உணவுக்கு மாற்றாகாது. மண்ணை சாப்பிடுவதால் உடல்நலப் பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளது. உணவுத் தட்டுப்பாடு மற்றும் வறுமை, மனிதர்களை எந்த அளவுக்கு பரிதாப நிலைக்குத் தள்ளும் என்பதை ஹெய்ட்டியின் நிலைமை உணர்த்துகிறது.
இதையும் படிங்க : Poorva Punya Yoga : பூர்வ புண்ணிய யோகத்தால் தாறு மாறாக சொத்து சேர்க்கப் போகும் 4 ராசிகள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.













