Best Time To Oil Hair: தலைக்கு எண்ணெய் வைக்க சரியான நேரம் எது? காலையா, இரவா?
Best Time To Oil Hair: முடி நல்லா வளரணும்னா ரெகுலரா எண்ணெய் வைக்கிறது ரொம்ப முக்கியம். ஆனா, காலையில எண்ணெய் வைக்கிறது நல்லதா? இல்ல நைட் தூங்குறதுக்கு முன்னாடி வைக்கணுமா? நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

தலைக்கு எண்ணெய் தேய்க்கச் சிறந்த நேரம்
ஹேர் கேர்னு சொன்னாலே முதல்ல ஞாபகத்துக்கு வர்றது தேங்காய் எண்ணெய்தான். நம்ம பாட்டி காலத்துல இருந்தே இதைப் பயன்படுத்திட்டு இருக்கோம். முடி வளர்ச்சிக்கு இது ரொம்பவே ஹெல்ப் பண்ணும். ஆனா, இதை எப்போ தேய்க்கணும்னு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு. சிலர் நைட்ல தேய்க்கணும்னு சொல்வாங்க, சிலர் குளிக்கிறதுக்கு முன்னாடி தேய்க்கணும்னு நினைப்பாங்க. இன்னும் சிலர் காலையில தேய்க்கிறதுதான் பெஸ்ட்னு சொல்வாங்க. எண்ணெய் ரொம்ப நேரம் தலையில இருந்தா நல்லதுன்னு நினைக்கிறாங்க. அது உண்மையா? இல்ல குளிக்கிறதுக்கு முன்னாடி மட்டும் தேய்ச்சா போதுமா? நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
தலைக்கு எண்ணெய் தேய்த்தல்
நீங்க தலைக்கு எண்ணெய் வைக்கணும்னு நினைச்சா, குளிக்கிறதுக்கு ஒரு 30 நிமிஷத்துல இருந்து சில மணி நேரத்துக்கு முன்னாடி தேய்க்கிறதுதான் ரொம்ப நல்லது. இதனால நைட் முழுக்க தலை பிசுபிசுன்னு இருக்காது, அதே சமயம் எண்ணெயும் முடியில நல்லா வேலை செய்யும். முக்கியமா, குளிக்கிறதுக்கு முன்னாடி எண்ணெய் தேய்க்கிறதால, ஷாம்பு போடும்போது முடி டேமேஜ் ஆகுறதைத் தடுக்கலாம். தேங்காய் எண்ணெய் மேஜிக் பண்ணி முடியை வளர்க்காது, ஆனா முடி கொட்டுறதையும் டேமேஜ் ஆகுறதையும் கண்டிப்பா குறைக்கும்.
தலைக்கு எண்ணெய் தேய்க்கச் சிறந்த நேரம்
பகல்ல தலைக்கு குளிக்கிற பழக்கம் உங்களுக்கு இருந்தா, காலையில எண்ணெய் தேய்ச்சுட்டு 30 நிமிஷத்துல இருந்து சில மணி நேரம் கழிச்சு குளிக்கலாம். இல்லன்னா நைட் எண்ணெய் தேய்ச்சுட்டு காலையில குளிக்கலாம். ஆனா நிறைய பேருக்கு நைட் முழுக்க தலையில எண்ணெயோட தூங்குறது பிடிக்காது. அப்படிப்பட்டவங்க குளிக்கிறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி தேய்ச்சா போதும்.
எவ்வளவு நேரம் எண்ணெய் தலையில இருக்கணும்?
ஷாம்பு போடுறதுக்கு முன்னாடி 30 நிமிஷத்துல இருந்து சில மணி நேரம் எண்ணெய் தலையில இருந்தா போதும். ரொம்ப நேரம் தலையில எண்ணெய் இருக்கணும்னு அவசியம் இல்லை. முடி ரொம்ப ட்ரையா இருக்குறவங்க ரெகுலரா எண்ணெய் வைக்கலாம். ஆனா, ஏற்கனவே எண்ணெய் வழியிற முடி இருக்குறவங்க அதிகமா எண்ணெய் தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

