Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...
Guru Peyarchi 2022 Palangal: குருவின் வக்ர பார்வையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
guru peyarchi 2022
ஜோதிடத்தி படி, குரு பகவான் செல்வம், புகழ், வளர்ச்சி, மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக இருக்கிறார். குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். குருவின் அசுப பார்வை இருந்தால் பலருக்கும் கெடுதல் நடக்கும். அப்படியாக, குரு பகவான் கடந்த 29 ஜூலை 2022, தேவகுரு வியாழன் தனது ராசியான மீனத்தில் வக்ராமாகியுள்ளார்.
குரு பகவான் நவம்பர் 2022 வரை இந்த நிலையில் இருப்பார். இதற்குப் பிறகு குருவின் நிலை இயல்பான இயக்கத்தில், அதாவது நேரடி இயக்கத்தில் மாறும். குரு பகவானின் இந்த நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். அதன்படி, குருவின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்:
தேவகுரு வியாழன் ரிஷப ராசியின் 11வது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புகழ் இருக்கும். செல்வம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும், வியாபாரிகளுக்கு லாபமும் கிடைக்கும். இந்த இடமாற்றம் அனுகூலமான பலன் அளிக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
guru peyarchi 2022
கும்பம்:
வியாழன் கிரகம் கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் வக்ரமாகியுள்ளார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் செலவுகளால் சிரமப்படுவீர்கள். இந்த காலத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். ந்த நேரத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.
guru peyarchi 2022
மிதுனம்:
குரு பகவானின் வக்ர பெயர்ச்சி 10வது வீட்டில் வக்ரமாகியுள்ளார். மிதுன ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டாகும். இந்த இடமாற்றம் அனுகூலமான விளைவுகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.