கண்ணாடி vs செம்பு பாட்டில்: எதில் தண்ணீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
செம்பு அல்லது கண்ணாடி பாட்டில் இவை இரண்டில் எதில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக வெண்கலம், பித்தளை, தாமிரம், வெள்ளி போன்ற உலோகங்களான பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று கூறப்படுகிறது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை பொருட்களலான பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அறிவுறுத்திகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், செம்பு அல்லது கண்ணாடி இவை இரண்டில் எதில் தண்ணீர் குடிப்பது நல்லது என்ற விவாதத்தில், பெரும்பாலும் செம்பை தான் பரிந்துரை இருக்கிறார்கள். மேலும் பலர் அதன் சாத்தியமான சில ஆரோக்கிய நன்மைகளை சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே, செம்பு அல்லது கண்ணாடி பாட்டில் இவை இரண்டில் எதில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பு பாட்டில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்:
- தண்ணீரில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிப்பதற்கு உதவும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் செம்பில் உள்ளதாக சொல்லப்படுகின்றது.
- சொம்பு இரும்பை உறிஞ்சுவதற்கோ பெரிதும் உதவும். மேலும் இது ரத்த சிவப்பு உற்பத்திக்கு முக்கியமானது என்பதால், இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மற்றும் ரத்த சோகையை தடுக்க பெரிது உதவும்.
- அதுமட்டுமின்றி செம்பு செரிமானத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளை நீக்க உதவும் என்று கூறுகின்றனர்.
- தாமிரம் ஒரு அத்தியாவசிய நுண்ணுட்டச்சத்து ஆகும். சிலர் செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் இந்த தாது பொருட்களின் இயற்கையான அளவை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.
கண்ணாடி பாட்டில் தண்ணீர் குடிப்பது நன்மைகள்:
- கண்ணாடி கிளாஸில் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது மற்றும் இது மந்தமான பொருளாக கருதப்படுகிறது.
- கண்ணாடியானது தண்ணீருக்கு கூடுதல் சுவை அல்லது வேதியல் பண்புகளை கொடுப்பதில்லை.
கண்ணாடி vs செம்பு பாட்டில்: எது பெஸ்ட்?
- நீங்கள் செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிக்க விரும்பினால் அளவோடு குடிக்கவும் அதன் அதிகப்படியான நுகர்வு பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது, கல்லீரல் மற்றும் சிறுநீரககளுக்கும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும்.
- தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேராமல் இருக்க செம்பு பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நச்சு தன்மையை பற்றி கவலைப்பட்டால் வசதியான மற்றும் எளிமையான விருப்பத்தை விரும்பினால் கண்ணாடி சிறந்த தேர்வாக இருக்கும்.