MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fan : சீலிங் ஃபேனில் ஜம்முனு காத்து வர எவ்வளவு உயரத்துல மாட்டணும்னு தெரியுமா? 90% பேருக்கு தெரியாத ரகசியம்

Fan : சீலிங் ஃபேனில் ஜம்முனு காத்து வர எவ்வளவு உயரத்துல மாட்டணும்னு தெரியுமா? 90% பேருக்கு தெரியாத ரகசியம்

Ceiling Fan : வீடுகளில் இருக்கும் ஃபேன் எப்போதுமே சீலிங்கில் இருந்து குறைந்தது குறிப்பிட்ட அளவு கீழே இருக்கணுமாம். சீலிங்கிற்கு ரொம்ப பக்கத்துல ஃபேன் இருந்தா, அதிலிருந்து காத்து கம்மியா வருமாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 22 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ceiling Fan height
Image Credit : AI Image

Ceiling Fan height

வெயில் காலம் வந்தாச்சு. இப்போ எல்லார் வீட்லயும் ஏசி, கூலர், ஃபேன் எல்லாம் ஓட ஆரம்பிச்சிருச்சு. இப்போ நிறைய பேர் வீட்ல ஏசி, கூலர் வந்துட்டாலும், சீலிங் ஃபேன் இல்லாத வீடுகளே இல்லை. சிலர் ஸ்டைலா இருக்குற ஃபேன்களை வாங்கி மாட்டுறாங்க. ஆனா, சில ரூம்ல ஃபேன் காத்து நல்லா வரும், சில ரூம்ல வராது. இதுக்கு காரணம், ஃபேனோட சைஸ், பிராண்ட், மோட்டார் மட்டும் இல்லை, ரூமோட அளவு, முக்கியமா ஃபேன் மாட்டியிருக்கிற உயரமும் தான். அப்போ, நல்ல ஜில்லுனு காத்து வரணும்னா, சீலிங் ஃபேனை எவ்வளவு உயரத்துல மாட்டணும்? வாங்க பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சீலிங் ஃபேன் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும்?
Image Credit : AI Image

சீலிங் ஃபேன் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும்?

எக்ஸ்பர்ட்ஸ் சொல்றபடி, சீலிங் ஃபேனிலிருந்து நல்ல காத்து வரணும்னா, அதை ஒரு குறிப்பிட்ட உயரத்துல பொருத்தணும். சரியான உயரத்துல ஃபேன் இருந்தா காத்து நல்லா வர்றதோட, பாதுகாப்புக்கும் நல்லது. அமெரிக்கன் லைட்டிங் சொசைட்டி இதுபத்தி ஒரு விஷயம் சொல்லியிருக்காங்க. அதாவது, நல்ல காத்து வேணும்னா, ஃபேன்-ஐ ரூமோட தரையிலிருந்து 8-9 அடி உயரத்துல பொருத்தணுமாம். இந்த உயரத்துல ஃபேன் இருந்தா, ரூம் முழுக்க காத்து நல்லா பரவும், பாதுகாப்பாகவும் இருக்கும்னு அவங்க சொல்றாங்க.

Related Articles

Related image1
Cleaning Hacks: 5 நிமிடத்தில் சீலிங் ஃபேன் பளபளக்கும்! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் சீக்ரெட் டிப்ஸ்!
Related image2
cleaning tips: ஃபேன் சுத்தம் செய்ய கஷ்டப்படுறீங்களா? இதோ 6 'ஸ்மார்ட்' ட்ரிக்ஸ்!
34
ரூமின் சீலிங்கில் இருந்து எவ்வளவு கீழே இருக்க வேண்டும்?
Image Credit : Getty

ரூமின் சீலிங்கில் இருந்து எவ்வளவு கீழே இருக்க வேண்டும்?

அமெரிக்கன் லைட்டிங் சொசைட்டியின்படி, ஃபேன் எப்போதுமே சீலிங்கில் இருந்து குறைந்தது 8 இன்ச் கீழே இருக்க வேண்டும். சீலிங்கிற்கு ரொம்ப பக்கத்துல ஃபேன் இருந்தா, காத்து கம்மியா வரும், மேலே இருக்கும் சூடான காத்துதான் கீழே வரும். அதேபோல, தரையிலிருந்து சரியான உயரத்தில் இருந்தால், கையை தூக்கும்போது அல்லது நடக்கும்போது தலையிலோ கையிலோ இடித்துக்கொள்ளும் பயம் இருக்காது.

44
சீலிங் ஃபேன் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை
Image Credit : Gemini AI

சீலிங் ஃபேன் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை

1. ஃபேனை எப்போதுமே ரூமின் நடுவில் பொருத்த வேண்டும். அப்போதுதான் ரூம் முழுக்க காற்று சமமாகப் பரவும்.

2. ஃபேனை சுவருக்கு மிக அருகில் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால், அது சுவரில் இடிக்கும் அபாயம் உள்ளது.

3. ஃபேனின் இறக்கைகள் சுற்றும் வட்டத்திற்கு வெளியே குறைந்தது 6 இன்ச் வரை எந்தப் பொருளும் இருக்கக்கூடாது.

4. ஃபேனை மாட்டுறதுக்கு பயன்படுத்துற கொக்கி நல்ல உறுதியானதா, சரியா பொருத்தப்பட்டதான்னு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

5. கெப்பாசிட்டரை மாற்றுங்கள்: ஃபேன் வேகமாகச் சுழல்வதற்கு 'கெப்பாசிட்டர்' தான் முக்கிய காரணம். நாளடைவில் இது வீக் ஆகிடும், அதனால ஃபேன் சோர்வா சுத்துற மாதிரி இருக்கும். உங்க ஃபேன் மெதுவா சுத்துனா, முதல்ல கெப்பாசிட்டரை செக் பண்ணுங்க அல்லது புதுசா மாத்திடுங்க. இது ஃபேன் வேகத்தை உடனடியாக அதிகரிக்கும்.

6. சர்வீஸ் மற்றும் கிரீஸிங்: ஏர் கண்டிஷனர் மாதிரி சீலிங் ஃபேனுக்கும் சர்வீஸ் தேவை. மோட்டார்ல கிரீஸ் குறைஞ்சாலோ அல்லது வயரிங் லூஸா இருந்தாலோ, ஃபேன் சத்தம் போடும் அல்லது மெதுவாக சுத்தும். சரியான நேரத்துல ஃபேன் மோட்டாருக்கு ஆயிலிங் அல்லது கிரீஸிங் செஞ்சா, அது ஸ்மூத்தா ஓடும்.

7. தூசி மற்றும் சுத்தம்: ஃபேன் ரெக்கைகள்ல தூசி சேர்ந்தா, அதோட எடை அதிகமாகி, காத்தை தள்ளுற திறன் குறைஞ்சிடும். அதனால, வாரம் ஒருமுறை அல்லது 15 நாளைக்கு ஒருமுறை, ஈரத்துணியால ரெக்கைகளை நல்லா துடைச்சு எடுங்க. இதனால காத்தோட்டம் நல்லா இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mango Benefits: தினமும் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்
Recommended image2
Kitchen Sink: அடைத்த கிச்சன் சிங்கை சரி செய்ய பிளம்பரை கூப்பிடாதீங்க!
Recommended image3
நீர் யானைகளின் வியர்வை ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது தெரியுமா? 99% பேருக்கு தெரியாத சுவாரஸ்யமான அறிவியல் காரணம்.!
Related Stories
Recommended image1
Cleaning Hacks: 5 நிமிடத்தில் சீலிங் ஃபேன் பளபளக்கும்! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் சீக்ரெட் டிப்ஸ்!
Recommended image2
cleaning tips: ஃபேன் சுத்தம் செய்ய கஷ்டப்படுறீங்களா? இதோ 6 'ஸ்மார்ட்' ட்ரிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved