பந்தா இல்லாமல் மகன் திருமணத்தை நடத்திய அதானி; ஜீத் - திவா திருமண போட்டோஸ்!
கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் பிப்ரவரி 7 அன்று அஹமதாபாத்தில் நடைபெற்றது. குஜராத்தி மரபுகளின்படி நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஜீத் அதானி தனது தந்தையுடன் அதானி குழுமத்தில் பணிபுரிகிறார்.

பந்தா இல்லாமல் மகன் திருமணத்தை நடத்திய அதானி; ஜீத் - திவா திருமண போட்டோஸ்!
கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவாவுக்கும் ஆகியோரின் திருமண விழா பிப்ரவரி 7 அன்று அஹமதாபாதில், அதானி டவுன்ஷிப் ஷாந்திகிராம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் குஜராத்தி மரபுகள் மற்றும் பாரம்பரிய சடங்குகளின்படி நடத்தப்பட்டது.
கெளதம் அதானி
ஜீத் - திவாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்த கெளதம் அதானி, சர்வ வல்லமையுள்ள இறைவனின் அருளால், ஜீத் மற்றும் திவா இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். இது மிகத் தனிப்பட்ட மற்றும் சிறிய நிகழ்வாக அமைந்ததால், எல்லா உறவினர்களையும் அழைக்க இயலவில்லை.
கெளதம் அதானி மகன்திருமணம்
அதற்கு வருந்துகிறேன். ஆனால், அனைவரின் ஆசிகள் எப்போதும் தேவையானவை என பதிவிட்டார். ஜீத் அதானியின் வாழ்க்கைத் துணையாக இணைந்த திவா ஷா, புகழ்பெற்ற வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகளாவார். அவரது வைர வியாபாரம் மும்பை மற்றும் சூரத்தில் பரவலாக உள்ளது.
ஜீத் அதானி திருமணம்
ஜீத் மற்றும் திவா கடந்த மார்ச் 2023ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இருவரும் திருமணம் செய்ய நேரிட்டது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. ஜீத் அதானி தனது உயர்கல்வியை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.
ஜீத் - திவா திருமண புகைப்படங்கள்
பின் 2019ல் அதானி குழுமத்தில் இணைந்து, தனது தந்தை கெளதம் அதானி உடன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சிறப்பு திருமண நிகழ்வில், அதானி குடும்பத்தினர் மற்றும் அருகிலுள்ள சில நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா?