Mars Transit: மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம்...இன்னும் 17நாட்களில் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் ராசிகள்..!
Mars Transit: செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு, மீண்டும் வரும் அக்டோபர் 16 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.
செவ்வாய் கிரகம் 202: ஜோதிடத்தின் பார்வையில் செவ்வாய் கிரகம் பலம், வீரியம், பலம் ஆகியவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். முன்னதாக செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது ராசியான மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறினார். இதையடுத்து, வரும் அக்டோபர் 16 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். பின்னர், இரண்டு வாரங்களுக்கு பிறகு, அக்டோபர் 30 அன்று, செவ்வாய் மிதுனத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். பின்னர் நவம்பர் 13ம் தேதி வரை இவர் இந்த நிலையில் இருப்பார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
செவ்வாயின் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்வில் பல நன்மைகளைத் தரும். தொழில், நிதி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சாதகமான சூழல் இருக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
Mars
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ஸ்தானத்தில் ஏற்படும் மாற்றங்களால் அதிக லாபம் கிடைக்கும். எங்கு முதலீடு செய்தாலும் லாபம் மட்டுமே கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்வில் ஒற்றுமை இருக்கும்.
MARS
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி பெரிய பலன்களைத் தரும். இந்த நேரம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். உங்களது கடின உழைப்பு மற்றும் பொறுமையின் பலனை நீங்கள் அறுவடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.