மிதக்கும் குடிலில் தங்கி மலையின் அழகை ரசிக்கலாம்! மாலத்தீவு போல மயக்கும் தெஹ்ரி!
வட இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் அதன் அழகிய மலைவாசஸ்தலங்களுக்கு பிரபலமானது. குறிப்பாக தெஹ்ரியில் மலையோரமாக உள்ள மிதக்கும் வீடுகளில் தங்குவது மாலத்தீவு போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.
Tehri Tourism
வட இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் அதன் அழகிய மலைவாசஸ்தலங்களுக்கு பிரபலமானது. பாராகிளைடிங், மலையேற்றம், நீர் விளையாட்டு அல்லது ரிவர் ராஃப்டிங் என சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய அனைத்தையும் கொண்டுள்ளது. குறிப்பாக தெஹ்ரியில் மலையோரமாக உள்ள மிதக்கும் வீடுகளில் தங்குவது மாலத்தீவு போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.
Tehri Boating
உத்தரகாண்டில் படகு சவாரி செய்ய விரும்புவோருக்கு, இதுவே சரியான இடமாகும். தெஹ்ரி ஏரியின் இயற்கை அழகு உண்மையிலேயே மனதைக் கவரும் வகையில் உள்ளது. பசுமையான மலைக் காட்சிகள், பல்வேறு சாகச நடவடிக்கைகள் அனைவருக்கும் மறக்க முடியாத பயணத்தை உறுதி செய்கிறது.
Tehri Floating hut
மாலத்தீவில் காணப்படும் மிதக்கும் வீடுகளைப் போலவே, தெஹ்ரி அணையிலும் கங்கை மற்றும் பாகீரதி நதிகள் கூடும் இடத்தில் மிதக்கும் வீடுகள் உள்ளன. இந்த மிதக்கும் வீடுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. சாகச ஆர்வலர்கள் படகு சவாரி செய்யலாம். பாராசெயிலிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
Tehri Food
கான்டினென்டல், சீன மற்றும் வட இந்திய உணவு வகைகளை வழங்கும் பல உணவகங்களை தெஹ்ரியில் உள்ளன. அழகான நீல வானத்தின் கீழ் திறந்த வெளியில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பும் உண்டு. டெல்லியில் இருந்து தெஹ்ரிக்கு ஒரு நாள் பயணத்திற்கு, பொதுவாக ரூ.6000 முதல் 8000 வரை செலவாகும்.
Tehri Honeymoon
இயற்கையின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை படம்பிடிக்க ஏற்ற இடமாகவும் உள்ளது. தெஹ்ரியின் அழகிய மிதக்கும் வீடுகளில் இருந்து, இயற்கை வனப்பை போட்டோ எடுத்து மகிழலாம். ஹனிமூன் செல்வோருக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.