MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எஸ்கலேட்டரில் சேலை, செருப்பு சிக்கினா இழுக்காதீங்க.. எதை செய்யணும்? எதை தவிர்க்கணும்?

எஸ்கலேட்டரில் சேலை, செருப்பு சிக்கினா இழுக்காதீங்க.. எதை செய்யணும்? எதை தவிர்க்கணும்?

Escalator Safety Tips: எஸ்கலேட்டர்களில் சேலை அல்லது செருப்பு சிக்கிக்கொண்டால் பதற்றப்படக் கூடாது. இப்படி நிகழும்போது எதை செய்ய வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 16 2026, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எஸ்கலேட்டரில் எதை செய்ய வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?
Image Credit : AI

எஸ்கலேட்டரில் எதை செய்ய வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?

ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என எங்கு சென்றாலும் எஸ்கலேட்டரில் ஆடை சிக்கினால் என்ன செய்வது என்ற பயம் பலருக்கும் இருப்பது இயல்புதான். நகரும் படிக்கட்டுகளில் பெண்களின் புடவை, துப்பட்டா அல்லது குழந்தைகளின் ரப்பர் செருப்புகள் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

இப்படிப்பட்ட நேரங்களில் பதற்றப்படாமல், படிக்கட்டின் தொடக்கம் அல்லது முடிவில் இருக்கும் 'எமர்ஜென்சி ஸ்டாப்' (Emergency Stop) பட்டனை அழுத்துவதுதான் முதல் மற்றும் முக்கியமான தற்காப்பு நடவடிக்கை. அந்தப் பட்டன் எங்குள்ளது என்பதை முன்கூட்டியே கவனித்து வைத்துக்கொள்வது விபத்து நேரங்களில் கைகொடுக்கும். இயந்திரம் முழுமையாக நிற்கும் வரை சிக்கிய பொருளை பலம் கொண்ட மட்டும் இழுக்கக் கூடாது. அருகில் இருப்பவர்களின் உதவியோடு உடனடியாகப் பாதுகாப்புப் பணியாளர்களை அழைப்பதுதான் புத்திசாலித்தனம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
துணி மாட்டிக்கொண்டால் இழுக்காதீர்கள்
Image Credit : others

துணி மாட்டிக்கொண்டால் இழுக்காதீர்கள்

நீளமான ஆடைகளின் ஓரங்கள் எஸ்கலேட்டர் படிகளுக்குள் சென்றுவிட்டால், அதை வெளியே எடுக்க முரட்டுத்தனமாகப் போராடக் கூடாது. அப்படிச் செய்யும்போது துணி இன்னும் வேகமாக உள்ளே இழுக்கப்பட்டு, நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் அதிகம். ஆடையைக் காப்பாற்றுவதை விட, நம் உயிரையும் உடலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுதான் அந்த நொடியில் முக்கியம். சிக்கிய துணியை வெட்டி எடுப்பது, இயந்திரத்தைக் கழற்றுவது போன்ற வேலைகளைப் பயிற்சி பெற்ற ஊழியர்களிடம் விட்டுவிட வேண்டும். இதில் நாமே ஹீரோயிசம் காட்ட நினைப்பது விபரீதத்தில்தான் முடியும்.

34
ரப்பர் செருப்புகளும் பக்கவாட்டு இடுக்குகளும்
Image Credit : our own

ரப்பர் செருப்புகளும் பக்கவாட்டு இடுக்குகளும்

மென்மையான ரப்பர் காலணிகள் நகரும் படிகளுக்கும் பக்கவாட்டுச் சுவருக்கும் இடையிலான இடைவெளியில் எளிதாக சிக்கிக்கொள்ளும். குறிப்பாகச் சிறுவர்கள் மஞ்சள் நிற எச்சரிக்கைக் கோடுகளுக்கு வெளியே கால்களை வைக்கும்போது இந்த ஆபத்து நேர்கிறது. செருப்பு மாட்டிக்கொண்டால், அதைக் கைகளால் எடுக்க முயற்சி செய்து விரல்களை இயந்திரத்துக்குள் விட்டுவிடக் கூடாது.

குனிந்து செருப்பை எடுக்க முயல்வது பேலன்ஸை தவறச் செய்துவிடும். இயந்திரத்தை நிறுத்திவிட்டு, செக்யூரிட்டிகளின் உதவியைக் கேட்பதே பாதுகாப்பானது. காலணிகளின் முன்பகுதியும் ஆடைகளும் பக்கவாட்டில் உரசாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

44
கவனிக்க வேண்டியவை
Image Credit : our own

கவனிக்க வேண்டியவை

எஸ்கலேட்டரில் ஏறுவதற்கு முன்பாகவே அதன் படிகள் சீராக இயங்குகிறதா என்பதை ஒருகணம் கவனிப்பது நல்லது. ஏறியதும் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, படியின் மையப்பகுதியில் நிற்கப் பழக வேண்டும். மொபைல் போனை நோண்டிக்கொண்டே செல்வது, படிகளில் உட்காருவது, ஓடுவது, குதிப்பது, எதிர்த்திசையில் நடப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளைத் தனியாக விடாமல் அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்வது அவசியம். சக்கர நாற்காலிகள், பெரிய லக்கேஜ்கள், குழந்தை வண்டிகள் ஆகியவற்றை நகரும் படிக்கட்டுகளில் கொண்டு செல்வது பாதுகாப்பற்றது.

அவற்றுக்கு லிஃப்ட் பயன்படுத்துவதே சரியான தேர்வு. படிக்கட்டின் உச்சியை அடைந்ததும் உடனடியாக அங்கிருந்து முன்னோக்கி நடந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு நின்றுகொண்டு துணியைச் சரிசெய்வது பின்னால் வருபவர்கள் மீது மோதும் நிலையை உருவாக்கும். ஒருவேளை விபத்து நடந்துவிட்டால், வேடிக்கை பார்க்கக் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து மீட்புப் படையினருக்கு வழிவிட வேண்டும்.

சிறிய கவனக்குறைவு கூட எதிர்பாராத பெரிய விபத்துகளுக்குக் காரணமாகிவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அடிப்படைப் பாதுகாப்பு விதிகளைத் தெரிந்து வைத்திருந்தால், நகரும் படிக்கட்டுகளில் ஏற்படும் விபத்துகளை எளிதாகத் தவிர்க்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Clothes Washing Tips: துணிகள் பளிச்சென்று வரவில்லையா? வாஷிங் மெஷினில் நீங்க செய்யும் தவறு இதுதான்
Recommended image2
2016 vs 2026 : தங்கம் டூ ஒரு கிரவுண்டு நிலம்... 10 வருஷத்துக்கு முன்பு என்ன விலை? இப்போது எவ்வளவு?
Recommended image3
Medicine Storage: மாத்திரைகள், மருந்துகளை இந்த இடங்களில் வைக்காதீர்கள்! எங்கெல்லாம் தெரியுமா?
Related Stories
Recommended image1
செல்ஃபி மோகத்தால் பலியான கைக்குழந்தை! எஸ்கலேட்டரில் மோதி கீழே விழுந்து உடல் சிதறி இறந்த சோகம்!
Recommended image2
இந்த நாடு தொழில்நுட்பத்தில் டாப்பு டக்கரு...ஆனால் இங்கு எஸ்கலேட்டர் பயன்படுத்த தடை..! ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved