மழைக்காலத்தில் குழந்தைங்க சருமம் வறண்டு போகுதா? பட்டுப் போல மாற பெற்றோர் செய்ய வேண்டியது இதுதான்!!
Monsoon Skin Care for Kids : மழைக்காலத்தில் குழந்தைகளின் சருமம் வறண்டு போனால், பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Monsoon Skin Care for Kids In Tamil
மழைக்காலத்தில் ஆரம்பமாகி விட்டதால் பருவ கால தொற்றுக்களின் பாதிப்பு அதிகமாகும். இந்த பருவத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வருவது இயல்பானது தான். ஆனால் இதையும் தவிர, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வரும். இந்த பிரச்சனையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
Monsoon Skin Care for Kids In Tamil
அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அலர்ஜி, எக்ஸிமா உள்ளிட்ட பல தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதால் குழந்தைகள் அழுதுவார்கள். இதற்கு முக்கிய காரணம் சரும வறண்டு போவதாகும்.
அந்த வகையில் உங்கள் குழந்தைக்கும் இந்த மழைக்காலத்தில் தோல் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? எனவே இந்த பருவத்தில் உங்களது குழந்தையின் சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: டெங்கு, மலேரியாவிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெற்றோருக்கான டிப்ஸ்!
Monsoon Skin Care for Kids In Tamil
மழைக்காலத்தில் குழந்தைகளின் சருமம் வறண்டு போவதை தடுக்க சில வழிகள் இங்கே:
1. நீரேற்றமாக வைக்கவும்
கோடைகாலமானாலும் சரி, மழைக்காலமானாலும் சரி குழந்தைகளின் உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும். ஒருவேளை குழந்தையின் உடலில் நீர் சத்து குறைவாக இருந்தால் சருமம் வறண்டு போய்விடும். இதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்படும். எனவே குழந்தைகளை எப்போதுமே நீரேற்றமாக வைத்திருங்கள். மேலும் உங்கள் குழந்தைக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க கொடுத்தால் அவர்களது சருமம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
2. எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்
மழைக்காலத்தில் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு அதிக ரசாயனம் கலந்த சோப்புகளுக்கு பதிலாக, லேசான சோப்புகளை பயன்படுத்துங்கள். இது தவிர குழந்தைகள் உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் அவர்களது வறண்டு போகாது மற்றும் எந்தவிதமான தோல் பிரச்சனைகளும் ஏற்படாது.
Monsoon Skin Care for Kids In Tamil
3. முறையாக குளிக்க வையுங்கள்
மழை காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்படாமல் இருக்க சூடான தண்ணீரில் குளிக்க வைப்போம் ஆனால் இப்படி அடிக்கடி செய்து வந்தால் குழந்தையின் சருமம் சீக்கிரமாகவே வறண்டு போய்விடும். எனவே அப்படி ஏதும் நடக்காமல் இருக்க, உங்கள் குழந்தையை சீக்கிரமாகவே குளிப்பாட்டுங்கள்.
4. மழைக்கால ஆடைகளை பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை தவிர்க்கவும், அவர்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கவும், காட்டன் மற்றும் லேசான ஆடைகளை அவர்களுக்கு போடவும். குழந்தையின் சருமத்திற்கு எரிச்சலூட்டும் ஆடைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
5. மாய்சரைசர் பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் குழந்தைகளின் சருமம் வறண்டு போவதை தடுக்க மாய்ஸ்ரேசர் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இதனால் சருமம் வறண்டு போவது தடுக்கப்படும் அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் சின்ன பசங்க காய்ச்சலில் இருந்து தப்ப இதை மறக்காமல் செய்ங்க!