சின்ன வயதிலேயே 'உடல் பருமன்' குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் செய்யக் கூடிய விஷயங்கள்!!
Childhood Obesity Prevention Tips : சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பு வர காரணம் என்ன? அதனால் அவர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Childhood Obesity Prevention Tips In Tamil
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் தற்போது உடல் பருமன் பிரச்சனையானது மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் பருமன் அதிகரிப்பு காரணமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் அதிக கொழுப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு மக்கள் ஆளாகிறது.
அந்த வகையில், தற்போது குழந்தைகளும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
Childhood Obesity Prevention Tips In Tamil
பொதுவாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை உடல் பருமன் குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால் அப்படியே விட்டுவிட்டால் அது பல கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் தெரியுமா? இந்நிலையில், குழந்தைகளுக்கு உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: குழந்தை வளர்ப்பில் அம்மாக்கள் இந்த தவறுகளை செய்தால் 'இன்றே' திருத்திக்கோங்க!!
Childhood Obesity Prevention Tips In Tamil
குழந்தைகளின் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்:
1. அதிக கலோரி உள்ள உணவுகள் மற்றும் துரித உணவுகள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுவது. இத தவிர சர்க்கரை பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளையும் சாப்பிடுவது.
2.வீடியோ கேம்கள், மொபைல் போன் டிவியில் அதிக நேரம் செலவிடுவதால் உடல் செயல்பாடுகள் பங்கேற்பதில்லை. இதனால் உடல் பருமன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
3. குடும்பத்தில் யாருக்காவது உடல் பருமன் பிரச்சனை இருந்தால் அது குழந்தையை பாதிக்கும்.
4. மோசமான உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.
5. சில சமயங்களில் சில மருந்துகளால் கூட குழந்தைகளின் எடை கூடும் மேலும் சில ஹார்மோன் ஏற்றுத்தாழ்வுகளால் கூட உடல் பருமனாகும்.
Childhood Obesity Prevention Tips In Tamil
உடல் பருமனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்:
உடல் பருமனால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 'மோர்' கொடுக்கலாம்.. 'எதை' கொடுக்கவே கூடாது தெரியுமா?
Childhood Obesity Prevention Tips In Tamil
குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பது எப்படி?
1. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் அடங்கிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
2. நொறுக்கு தீனிகள் சர்க்கரை பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. அதுபோல குழந்தையை குறைந்தது 60 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக விளையாடுதல் ஓடுதல் குதித்தல் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.
4. வீடியோ கேம்கள், அதிக நேரம் டிவி மற்றும் மொபைல் பார்ப்பது ஆகியவற்றில் குறைந்த நேரத்தை செலவிடுமாறு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
5. உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தை பின்பற்றினால் குழந்தைகளின் உடல் பருமனை சுலபமாக தடுக்க முடியும். அதுபோல அவ்வப்போது குழந்தைகளின் எடையை பரிசோதித்து, ஏதுனை பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்