குளிர்காலத்தில் தினம் கொஞ்சம் பூண்டு; உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா?
Benefits of Raw Garlic : இந்த குளிர்காலத்தில் தினமும் கொஞ்சம் பூண்டு சேர்த்துக்கொண்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Garlic
இயல்பாகவே பூண்டு ஒரு நறுமப்பொருள். எனவே இது ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. உண்மையில், பூண்டு ஒரு நறுமணப்பொருள் மட்டுமல்ல, இது ஒரு மருத்துவ மூலப்பொருளும் கூட. இது உணவுகளை சுவையாக மாற்றுவது மட்டுமின்றி.. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. உண்மையில், பூண்டு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அதனால் தான் பூண்டு பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் பி6, வைட்டமின்-சி, அல்லிசின், மாங்கனீஸ் என பல வகையான சத்துக்கள் உள்ளன. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறப்புறுப்பில் சோப்பு போடுறப்ப இந்த '1' விஷயம் கவனம்.. 'இப்படி' சுத்தம் பண்றது தான் பெஸ்ட்!!
Raw Garlic
குளிர் காலத்தில் பூண்டினால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தினமும் இரண்டு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், பல நோய்கள் மற்றும் உபாதைகளை நாம் தவிர்க்கலாம். பூண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இந்த சீசனில் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வராது. வந்தாலும் சீக்கிரம் அது குறையும். பூண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பருவகால நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.
Raw Garlic Benefits
பூண்டு சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். மேலும் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். குறிப்பாக பூண்டு பற்களை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். சரி இப்போது குளிர்காலத்தில் தினமும் காலையில் இரண்டு பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
குளிர்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைகிறது தெரியுமா? இதனால், இருமல், சளி, காய்ச்சல், தொற்று உள்ளிட்ட நோய்கள் அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால் இந்த சீசனில் பூண்டை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின் என்ற செயலில் உள்ள கலவை இதற்கு உதவுகிறது.
Garlic in Winter
உடல் எடை குறைய உதவுகிறது
மற்ற பருவங்களை விட குளிர்காலத்தில் எடை அதிகரிப்பு அதிகமாகும். ஏனென்றால் குளிரில் யாரும் உடற்பயிற்சி செய்வதில்லை. காலையில் தாமதமாக எழுந்து வேலைக்குச் செல்கிறார்கள். இந்தக் காலத்தில் சோம்பலும் அதிகமாகும். ஆகியால் இந்த சீசனில் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் இந்த சீசனில் தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை நிச்சயம் குறையும் என்கின்றனர் நிபுணர்கள். ஆம், தினமும் பூண்டு சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும், அது உடல் எடையை குறைக்க உதவும்.
கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. ஆனால் பூண்டு இதைக் குறைக்க உதவும். தினமும் பூண்டு சாப்பிடுவதால் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உடலில் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதய நோய் அபாயமும் குறைகிறது.
முழுபலன்களை பெற வெண்டைக்காய் கூட இந்த '5' உணவுகளை சாப்பிடக் கூடாது!!