- Home
- Lifestyle
- காதலர் தினம் 2025: உங்க பார்ட்னருக்கு இந்த 4 பொருளில் '1' கிப்ட் பண்ணாலும் பிரேக் அப் தான்!!
காதலர் தினம் 2025: உங்க பார்ட்னருக்கு இந்த 4 பொருளில் '1' கிப்ட் பண்ணாலும் பிரேக் அப் தான்!!
Valentine's Day 2025 : காதலர் தினத்தன்று நீங்கள் கொடுக்கும் சில பரிசுகள் உறவு முடிவுக்கு வரக்கூடும். எனவே நீங்கள் கொடுக்கக் கூடாத பரிசுகள் இங்கே.

காதலர் தினம் 2025: உங்க பார்ட்னருக்கு இந்த 4 பொருளில் '1' கிப்ட் பண்ணாலும் பிரேக் அப் தான்!!
காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காதலர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். ஒவ்வொரு காதல் ஜோடியும் வருடம் முழுவதும் இந்த ஒரு நாளுக்காக தான் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். இந்நாளில் தான் காதலர்கள் தங்களது காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி கொள்வார்கள். எனவே இந்த நாளில் மறக்க முடியாததாக மாற்ற அனைவரும் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்புவார்கள். இதனால் அவர்கள் காதலர் தினத்தன்று தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்குகிறார்கள்.
காதலர் தினத்தன்று துணைக்கு கொடுக்க கூடாத பரிசுகள்
உங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இது சரியான சந்தர்ப்பமாக இருந்தாலும் கூட, நீங்கள் சரியான பரிசை கொடுப்பதும் அதே அழிவுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் சில பரிசுகள் நல்ல நோக்கத்துடன் இருந்தாலும் தற்செயலாக அது உறவில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே இந்த ஆண்டு உங்களது காதலர் தினத்தை உண்மையிலேயே நீங்கள் மறக்க முடியாததாகவும், அன்பால் நிறைந்ததாகவும் இருக்க விரும்பினால் உங்கள் மனதிற்கு பிடித்த நபருக்கு கொடுக்கக் கூடாதா 4 பரிசுகள் இங்கே.
வாசனை திரவியம்:
வேதங்களின் படி காதலர் தினத்தன்றோ அல்லது வேறு எந்த பண்டிகை காலங்களிலோ உங்களது துணைக்கு வாசனை திரவியத்தை பரிசளிப்பது அசுபமாக கருதப்படுகிறது. இத்தகைய பரிசு உறவில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கி, முடிவில் விரிசலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
கடிகாரம்:
காதலர் தினத்தன்று உங்கள் துணைக்கு எக்காரணம் கொண்டும் கடிகாரத்தை பரிசளிக்க வேண்டாம். ஏனெனில், அது அவர்களின் செல்வத்தை பலவீனப்படுத்தும். இதனால் விரைவில் பிரச்சனைகள் கூட வருவதற்கு வழிவகுக்கும். இதனால் இருவரும் இருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: காதலர் தினம் 2025; காதலில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யாரெல்லாம் தெரியுமா?
கண்ணாடி பொருட்கள்:
காதலர் தினத்தன்று உங்கள் துணைக்கு கண்ணாடி பொருட்களை பரிசாக கொடுப்பதே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கண்ணாடி பொருட்கள் உடைய கூடியது என்பதால் அது அசுபமாக கருதப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கைகளின் படி, கண்ணாடி பொருட்களை பரிசளிப்பது உறவுகளுக்கு இடையே பிணைப்பை பலவீனப்படுத்தும்.
இதையும் படிங்க: Valentine's Week 2025 : காதல் வாரம்.. எந்த நாளில் 'கிப்ட்' கொடுத்தா லவ்வருக்கு பிடிக்கும்
தாஜ்மஹால்:
தாஜ்மஹால் காதலின் அன்பின் சின்னமாக கருதப்பட்டாலும், அதை காதலர் தினத்தன்று உங்கள் துணைக்கு பரிசாக கொடுக்க வேண்டாம். ஒரு மினியேச்சர் தாஜ்மஹாலை நீங்கள் உங்கள் துணைக்கு கொடுப்பதன் மூலம் அது உங்களது உறவை பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுபோல வீட்டில் தாஜ்மஹாலை வைத்திருப்பதும் துரதிஷ்டம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் அது எதிர்மறை சக்தியை உருவாக்கி குடும்பத்திற்குள் மோதல்களை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.