Sadhguru's Daughter | "ராதே ஜக்கி" யார் இவர் தெரியுமா?
புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞரும், யோகா பயிற்றுவிப்பாளருமான ராதே ஜக்கி யார் தெரியுமா உங்களுக்கு. இவர், கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டையின் நிறுவனர் மற்றும் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவின் மகளாவார்.
Radhe Jaggi with Father
ராதே ஜக்கி, சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் விஜிகுமாரியின் ஒரே மகள் தான் ராதே ஜக்கி. கர்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 1990ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலிருந்தே பரதநாட்டியக் கலைமீது ஆர்வம் கொண்டதால் அதனை கற்று தற்போது பயிற்றுவித்தும் வருகிறார்.
34 வயதான ராதே ஜக்கி, கலை மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற்றவர். அவர் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் பரதநாட்டியத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார், மேலும், சென்னையில் புகழ்வாய்ந்த தக்ஷிணசேத்ராவில் கலை மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஹார்வர்ட் சம்மர் ஸ்கூலில் வணிக மேலாண்மை பட்டயப் படிப்பும் முடத்துள்ளார்.
Radhe Jaggi
ராஜே ஜக்கி, செப்டம்பர் 3, 2014ம் ஆண்டு அன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கர்நாடக இசையின் முன்னணி பாடகரான சந்தீப் நாராயணனைனை கரம் பிடித்தார். சந்தீப் இந்திய பாரம்பரிய இசையின் புகழ்பெற்ற பாடகர் மற்றும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இருவரும் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
Kavya Maran | சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் காவ்யா மாறன் யார்?
Radhe Jaggi
ராதே, தனதுசமூக ஊடகங்கள் மற்றும் பிளாக்ஸ் சேனலின் மூலம் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் மொத்தம் 284K பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார், அதில் அவர் தனது வாழ்க்கை, நடன நிகழ்ச்சிகள், குடும்பம் மற்றும் பல ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
Radhe Jaggi With Husband
கூடுதலாக, அவர் ஒரு திறமையான யூடியூபராகவும் உள்ளார். யூடியூப் வளைபக்கத்தில் 63.4K பின்தொடர்பவர்களைக் கொணடுள்ளார். அவரது YouTube சேனலி அவரது நடன நிகழ்ச்சிகள், எளிதான நடன பயிற்சிகள், ஒத்திகைகள், நேர்காணல் துணுக்குகள் போன்றவற்றை பகிர்ந்துகொண்டு வருகிறார்.
ராதே ஜக்கி, இலக்கியம், நுண்கலைகள், இசை, ஸ்கூபா டைவிங், மலையேறுதல் மற்றும் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் யோகாவைத் தவிர்த்து பயணம் செய்வதிலும் அவ்வப்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
கௌதம் அதானியின் வெற்றிக்கு காரணமே இவங்க தான்.. ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?