நமது நாட்டின் தேசிய பானம் என்னன்னு தெரியுமா?
நம்மில் எத்தனை பேருக்கு நம் தேசிய பானம் என்னவென்று தெரியும்? என்ன பாஸ் இதெல்லாமா பார்த்துட்டு இருப்பாங்க அப்படின்னு நீங்க கேட்கிறது கேட்குது. வாங்க எதுன்னு பார்க்கலாம்.
நமது நாட்டின் தேசிய பானம் என்னன்னு தெரியுமா?
நம்மில் எத்தனை பேருக்கு நம் தேசிய பானம் என்னன்னு தெரியும்? பலருக்கும் தெரியாது. இப்ப பார்க்கலாம் வாங்க.
தேநீர் (டீ)
நம் நாட்டில், தினமும் மில்லியன் கணக்கான மக்கள் தேநீர் அருந்துகிறார்கள். வெறும் தேநீர் மட்டுமின்றி, பல்வேறு வகையான தேநீர் வகைகளையும் விரும்பி அருந்துகிறார்கள். இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசாலா டீ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தேநீரை விரும்பி அருந்துகிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தேநீர் மிகவும் பிரபலமான பானமாகும்.
தேநீர் நன்மைகள்
தேநீர் வெறும் ஒரு பானம் மட்டுமல்ல, அது பல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. தேநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு நன்மை பயக்கும். தேநீரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மற்றும் தேயிலை ஆகியவை இந்த நன்மைகளுக்கு காரணமாகின்றன. இனிமேல் தேநீர் அருந்தும்போது, அது நமது தேசிய பானம் என்பதையும் நினைவில் கொள்வோம்.