MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இப்படி கூடவா கல்யாணம் பண்றாங்க? மணமகளை கடத்தி 'திருமணம்' செய்றது எங்க தெரியுமா?

இப்படி கூடவா கல்யாணம் பண்றாங்க? மணமகளை கடத்தி 'திருமணம்' செய்றது எங்க தெரியுமா?

Weird Wedding Rituals : உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களில் உள்ள வித்தியாசமான திருமண பாரம்பரிய முறைகள் குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 25 2024, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Weird Wedding Rituals In Tamil

Weird Wedding Rituals In Tamil

ஒவ்வொரு நாட்டிலும் திருமண முறைகள் மாறுபடுகின்றன. அதில் இந்தியாவை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏன் மாவட்டங்களுக்கும் இடையே உள்ள திருமண சடங்குகளே வித்தியாசப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் மணமகனின் செருப்பை திருடும் பழக்கம் உள்ளது.

ஒரு சமூகத்தினர் இடையே மணமகனின் சகோதரிதான் மணமகளுக்கு தாலி கட்டுவார். இந்தியாவில் உள்ள சில இடங்களில் பின்பற்றப்படும் திருமண சடங்குகள் சட்டவிரோதமானதாக உள்ளன. உதாரணமாக கிர்கிஸ்தான், பீகாரில் திருமண நிகழ்வை முன்னிட்டு மணப்பெண்ணையே கடத்தும் வழக்கம் உள்ளது. நல்ல வாய்ப்பாக இவை இப்போது சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Weird Wedding Rituals In Tamil

Weird Wedding Rituals In Tamil

நம்முடைய கலாச்சாரங்கள் தான் திருமணத்தை கொண்டாட்ட நிகழ்வாக மாற்றுகிறது. ஏனென்றால் திருமணம் நடைபெறும் நாள் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நாளில் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு கலாச்சாரங்கள் வெவ்வேறு விதமான சடங்குகளைப் பின்பற்றுகின்றன. அதில் வினோதமானதாக உள்ளவற்றை இங்கு காணலாம். 

இதையும் படிங்க:  இது என்ன நூதனமா இருக்கு? இந்த ஊரில் புதுமண தம்பதிகள் சுடுகாட்டில் தான் முதல் பூஜை செய்வார்களாம்!

36
Weird Wedding Rituals In Tamil

Weird Wedding Rituals In Tamil

அவமானம் தான் டாஸ்க்: 
 
ஸ்காட்லாந்த் நாட்டின் சில பகுதிகளில் திருமண நாளன்று பின்பற்றப்படும் மரபு வியப்பளிக்கக் கூடியது. மணமகன், மணமகள் இருவரின் நண்பர்களும் திருமணத்திற்கு முன்பாக மணமக்களை அவமானப்படுத்தும் விதமான காரியங்களை செய்கின்றனர். அதாவது மாவு, முட்டை போன்றவைகளை  தம்பதிகள் மீது வீசுகிறார்கள்.

இப்படி செய்வது அவர்களுடைய  கலாச்சாரத்தில் முக்கியமான செய்தியை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் திருமண பந்தம் கடினமான பொறுப்புகளௌ கொண்டது. அதனால் ஒரு தம்பதி இதைத் தாங்கிக் கொண்ட பின்னரும் இணைந்து இருக்க முடிந்தால், அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்குமாம். இருவரும் இணைந்து திருமண வாழ்வில் வரும் கஷ்டங்களை இணைந்து சமாளிப்பார்கள் என நம்பப்படுகிறது. 

46
Weird Wedding Rituals In Tamil

Weird Wedding Rituals In Tamil

மணமகனின் காலணி களவு:  

இந்தியாவில் உள்ள இந்து திருமணங்கள் விசேஷமானவை. பல சடங்குகளை கொண்டிருக்கும். திருமண நாள் அன்று மணமகனின் காலணிகளைத் களவாடுவதும் ஒரு சடங்கு தான். ஆனால் வேடிக்கையானது. இந்த காலணி திருட்டை மணப்பெண்ணின் பெண் உறவினர்கள் தான்  செய்வார்கள்.

யாருக்கும் தெரியாமல் அவர்கள் மணமகனின் காலணிகளை திருடுவது ஒரு சுவாரசிய நிகழ்வாகும். இதன் பின்னர் மணமகனிடம் அதற்கு விலை பேசி தான் திருப்பித் தருவார்கள். இதனால் மணமகனுக்கும் கொழுந்தியா உறவு முறையினருக்கும் இடையே ஒரு நட்புரீதியான பந்தம் உருவாகும். 

இதையும் படிங்க:  இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சு போடப்படுகிறது ஏன் தெரியுமா? 

56
Weird Wedding Rituals In Tamil

Weird Wedding Rituals In Tamil

மணப்பெண் கடத்தப்படுதல்: 

கிர்கிஸ்தானில் வினோதமான பழக்கம் இருந்தது. முந்தைய காலத்தில் கிர்கிஸ்தான் ஆண்கள் அவர்களுக்கு பிடித்த பெண்ணைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்வார்களாம். இதில்  பெண்ணின் சம்மதம் பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. பெண் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கும்.

நல்லவேளையாக தற்போது இதனை அரசு சட்டவிரோதமாக்கியுள்ளது. இதை போலவே இந்தியாவில் உள்ள பீகாரின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இதில்  பெண்ணின் தரப்பினர் ஒரு ஆணை கட்டாயமாக கடத்திச் சென்று, தங்கள் மகளையோ  சகோதரியையோ திருமணம் செய்து வைப்பார்கள். இந்த முறை குறித்து தனுஷ் நடித்த கலாட்டா கல்யாணம் படத்தில் காட்டப்பட்டிருக்கும்.   

66
Weird Wedding Rituals In Tamil

Weird Wedding Rituals In Tamil

பாத்திரத்தை உடைத்தல்: 

ஜெர்மனியில் உள்ள இந்த பாரம்பரியம் புதிய தம்பதிக்கு  குழுப்பணியை சொல்லி கொடுக்கும்.  திருமணம் ஆனதும் விருந்தினர்கள் அனைவரும் புதுமண தம்பதியரின் வீட்டிற்குச் செல்வார்கள். அங்குள்ள பாத்திரங்கள், மட்பாண்டங்களை ஆவேசமாக போட்டு உடைப்பார்கள். இப்படி செய்தால் திருமணமான தம்பதிக்கு  அதிர்ஷ்டம் வரும் என நம்புகிறார்கள். ஏனென்றால் விருந்தினர்கள் வீட்டுக்கு திரும்பிய பின்னர், புது தம்பதி தான் குப்பை மேடான வீட்டை  சுத்தம் செய்வார்கள். இதனால் இருவரும் குழுவாக செயல்படுவார்கள்.  அதுவே இந்த பாரம்பரியத்தின் நோக்கம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved