நேரில் போகாம கிஸ் அடிக்க புது கருவி.. காஞ்சு போய் திரியுறவங்களுக்கு ஆறுதல்.. குஷியாகும் காதலர்கள்!!
தூரத்தில் இருக்கும் காதலர்களின் காதலை வேதனையை விளக்க முடியாது. தொலைதூர காதலர்களின் துயரம் போக்கவே புதிய கருவியை சீனா கண்டுபிடித்துள்ளது.
Image: Getty Images
பல தம்பதியினர் வேலை, படிப்பு மற்றும் பிற காரணங்களால் தொலைதூரத்தில் இருக்கின்றனர். அவர்களை காதல் தான் ஒன்றிணைத்து வைத்துள்ளது. கணவன்-மனைவி இடையே இடைவெளி அதிகமாக இருப்பதால், சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. தொலைதூர உறவில், காதலர்களின் சந்திப்பு மிகவும் குறைவு. கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் கூட எட்டாக்கனி.
Image: Getty Images
அழுவதற்கு தோள் இல்லை, தூங்க மடி இல்லை. அவர்களால் செய்ய முடிந்தது காத்திருப்பதுதான். அத்தகைய உறவை பாதுகாப்பாக மாற்ற அவ்வப்போது சந்திப்பு, அரவணைப்பு மற்றும் முத்தம் கண்டிப்பாக தேவை. சந்திப்பதற்கு கூட வீடியோ கால் செய்யலாம். ஆனால் முத்தமிடுவது எப்படி? இந்த துயரத்தை போக்கும் வகையில் தொலைதூர உறவில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக முத்தமிடும் கருவியை சீனாவை சேர்ந்த ஜியாங் ஜாங்லி கண்டுபிடித்துள்ளார்.
இவரும் தனது காதலியுடன் நீண்ட தூர உறவில் இருந்தார். அப்போது அவரை தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் மனதில் தேங்கியிருக்கும் அன்பை முத்தமாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த ஏக்கம் தான் அவரை முத்தமிடும் கருவியை கண்டுபிடிக்க தூண்டியுள்ளது. சீனாவின் சான்சோவில் உள்ள சாங்சூ தொழிற்கல்வி நிறுவனம் மெகாட்ரானிக் டெக்னாலஜி இக்கருவிக்கு காப்புரிமை (Copyrights) வாங்கியுள்ளது.
முத்த கருவியை ரிமோட் கிஸ் எனவும் சொல்கின்றனர். இதில் நகரும் வகையிலான சிலிக்கான் உதடுகள் உள்ளனர். இந்த உதடுகள் வாயிலாக பிடித்த நபருக்கு முத்தத்தை அப்லோட் செய்துவிடலாம். அவர்களிடம் இருந்தும் நமக்கான முத்தத்தைப் பெறலாம். இந்த முத்தத்தை ருசிக்க இருவரிடமும் அந்த கருவியும் (kissing kit) செயலியும் (app) இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: மார்பகங்களை வைத்து வெயிட்டான பொருள்களை.. அலேக்கா தூக்கும் பெண்கள்.. ஷாக்கிங் போட்டோஸ் உள்ளே..!
முதலில் காதலர்கள் இருவரும் வீடியோ காலில் இணைய வேண்டும். பின்னர் முத்தங்களை பரிமாறி கொள்ள முடியும். அந்த கருவியில் உள்ள சென்சார் அந்த முத்தத்தை பதிவு செய்து கொள்கிறது. இந்த முத்தம் இணையம் மூலம் உங்கள் துணையிடம் இருக்கும் கருவிக்கும் உடனடியாக அனுப்பப்படுகிறது. உங்களுடைய முத்தம் அவருடைய சிலிகான் உதடுகளில் கிடைக்கும். வெறும் முத்தமாக இல்லாமல், ஒரு நபர் முத்தமிடும் போது அழுத்தம், இயக்கம், வெப்பம் முறையே எல்லாமே இந்த கருவி மூலம் சென்றுவிடும் என்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள முத்த கருவியின் விலை 288 யுவான் அதாவது ரூ.3,433 தான்.
நெட்டிசன்கள் இந்த கருவியை ஒருபுறம் புகழ்ந்தாலும், மற்றொரு புறம் கிண்டல் செய்தும் வருகின்றனர். சிலர் முத்தத்தை வாயில் மட்டும் தான் கொடுப்பார்களா என்ன? என கிண்டலடித்து வருகின்றனர். முத்தங்களுக்காக கருவி செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டில், மலேசியா, இமேஜினியரிங் நிறுவனம், தொடு உணர் சிலிக்கான் பேட் வடிவத்தில் 'கிஸ்ஸிங்கர்' எனும் முத்த கருவியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குளிக்க போனாலே பின்னால வர்றாரு.. அவரோட நிர்வாணமா குளிக்க வெட்கம் வருது.. புலம்பும் வாசகிக்கு நிபுணரின் பதில்