- Home
- Lifestyle
- காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
வெறும் வயிற்றில் கொய்யாப்பழம் சாப்பிடலாமா? எடை குறைப்பு, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, செரிமான நன்மைகள் மற்றும் நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கைகள் இதோ!

தினமும் வெறும் வயிற்றில் கொய்யாப்பழம் சாப்பிடலாமா?
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பலரிடமும் உண்டு. தினமும் காலையை ஒரு கொய்யாப்பழத்துடன் தொடங்குவது உடலில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைச் சேர்ப்பதற்கான எளிய வழியாகும். கொய்யாப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயிறு நிறைந்த உணர்வைத் தந்து நாள் முழுவதும் தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைக் குறைக்க உதவுகிறது என்கிறனர் உணவியல் நிபுணர்.
மேலும், இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தி, சருமப் பொலிவு மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு ஆதரவளிக்கிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழம் என்பதால், சமச்சீரான காலை உணவின் ஒருபகுதியாக இதைச் சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவை சட்டென உயர்த்தாமல், சீரான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
வெறும் வயிற்றில் சாப்பிடுவது பாதுகாப்பானதா?
பெரும்பாலான ஆரோக்கியமான நபர்களுக்கு இது முற்றிலும் பாதுகாப்பானது. கொய்யாப்பழம் பொதுவாக உடலால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்று என்பதால், அதை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இருப்பினும், செரிமானக் கோளாறு, எளிதில் பாதிக்கப்படக் கூடிய வயிறு அல்லது
ஐ.பி.எஸ் போன்ற குடல் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் அதிக நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது அசெளகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை வழக்கமாகச் சாப்பிடாதவர்களுக்கு இந்த சிரமம் ஏற்படலாம். அத்தகைய நபர்கள், கொய்யாப்பழத்தை சிறிதளவு நட்ஸ் (கொட்டை வகைகள்) உடன் இணைத்தோ அல்லது காலை உணவை முடித்த பிறகோ சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.
எடை குறைப்புக்கு உதவுமா?
கொய்யாப்பழத்தில் இயல்பாகவே கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். இதிலுள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது.
அதேசமயம், எந்தவொரு ஒற்றைப் பழமும் தானாகவே உடல் எடையைக் குறைத்துவிடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையான உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த சமச்சீரான உணவு முறை ஆகியவைதான் எடை குறைப்பிற்கான முக்கியமான காரணிகள் என நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
பெரும்பாலான மக்களுக்கு ஒரு நடுத்தர அளவிலான கொய்யாப்பழமே போதுமான அளவாகும். கொய்யாப்பழத்துடன் உப்பு, சர்க்கரை அல்லது கார மசாலாக்களைத் தொடர்ந்து சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் அவை பழத்தின் முழுமையான மருத்துவ நன்மைகளைக் குறைத்துவிடும். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் நார்ச்சத்தை படிப்படியாக உணவில் அதிகரிக்க வேண்டும்;
அத்துடன் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழத்தை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதனை ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தனித்தீர்வாகப் பார்க்காமல், அன்றாட கார்போஹைட்ரேட் அளவு மற்றும் உணவுத் திட்டத்திற்கு உட்பட்டுச் சாப்பிட வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.





