குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்தா சர்க்கரை நோய் வருமா? எச்சரிக்கும் நிபுணர்கள்!
Biscuits For Child : குழந்தைகளுக்கு பிஸ்கட் ஏன் கொடுக்கக் கூடாது? அதனால் அவர்களுக்கு வரும் ஆபத்துக்கள் என்ன? இதுகுறித்து நிபுணர்கள் விளக்கம் இங்கே..
Biscuits For Child
பிஸ்கட் என்றாலே குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்கட்டை ஸ்டாக் ஆக வாங்கி வீட்டில் வைத்திருப்பார்கள். அதுவும் இந்த காலத்து இளம் தாய்மார்கள் தாய்பாலுக்கு இணையாக ஒரு உணவு என்றால், அது பிஸ்கட் தான் என்கிறார்கள்.
காரணம் விளம்பரங்களில் பிஸ்கட் குறித்து ஆரோக்கியமானது ஊட்டச்சத்து நிறைந்தது என்று காட்டப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பிஸ்கட்களில் பல வகைகளும் சுவைகளும் உள்ளது. ஆனால், இவற்றால் குழந்தைகளுக்கு எந்த பையனும் இல்லை. இவை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்குமே தவிர, எந்தவித நன்மையும் கிடைப்பதில்லை. சொல்லப்போனால் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் மதிப்பை கணக்கிட்டால் பூஜ்ஜியமே.
இப்படி எந்தவித நன்மைகளும் வழங்காத பிஸ்கட்களை குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொடுத்தால் அது அவர்களுக்கு மோசமான வினையை உண்டாக்கும் இன்று பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.
Biscuits For Child
பிஸ்கட்களில் ஆரோக்கியமற்ற கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், செயற்கை இனிப்புகள் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதால் வரும் ஆபத்துகள் என்ன? அவற்றை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது ஏன் என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடுவதால் வரும் ஆபத்துக்கள் :
1. அதிகமாக பதப்படுத்தப்பட்டது : பொதுவாகவே பிஸ்கட் தயாரிப்புகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, செயற்கை சுவையூட்டிகள் நிறைவுற்ற கொழுப்புகள் சோடியம் மற்றும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிஸ்கட்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மோசமான தீங்கு உண்டாக்கும். இதனால் அவர்களுக்கு மோசமான செரிமான பிரச்சனை, வயிற்று வலி, வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
Biscuits For Child
2. செரிமான பிரச்சனை : பிஸ்கட் தயாரிப்பில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் மைதா இவை இரண்டும் நல்லதல்ல. ஏனெனில், கோதுமை மாவு சுத்திகரிக்கப்படுவதால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுகிறது அதுபோல மைதா கெட்டது என்று நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இவை இரண்டில் செய்யப்பட்ட பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களின் செரிமான பிரச்சனையை மெதுவாக்கும். சொல்லப்போனால் அவர்களது குடல்கள் பணியையும் தாமதப்படுத்தி, வளர்ச்சியையும் பாதிக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது மோசமான தீங்கு விளைவிக்கும். சிறு குழந்தைகளுக்கு தொடர்ந்து பிஸ்கட் கொடுத்து வந்தால் அவர்கள் தாய்ப்பால் குடிப்பதை விரும்பமாட்டார்கள்.
3. அதிக சர்க்கரை : பிஸ்கட்களில் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்ப்பதால், அவை குழந்தைகளின் உடலில் கலோரிகளை சேர்க்கும். இதனால் அவர்களது எடை அதிகரிக்கலாம். இது தவிர, பல் பிரச்சனை, டைப் 2 நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.
Biscuits For Child
4. மலச்சிக்கல் பிரச்சனை : பிஸ்கட் தயாரிப்புகளில் குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்கும் எந்த பொருட்களும் இல்லை. சொல்லப்போனால் குழந்தைகள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைதான் வரும்.
5. அடிமையாக்கும் : பிஸ்கட்டில் இருக்கும் கொழுப்பு சர்க்கரை மற்றும் உப்பு போன்ற கலவையானது அடிமையாக்கும் உணர்வுகளை தூண்டும். இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தூண்டும். காரணம், அதன் சுவை அப்படி. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். இதனால் அவர்களது உணவு பழக்கம் மோசமடையும். கூடுதலாக, கெட்ட கொழுப்பு அவர்களது உடலில் சேர்ந்து எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்