MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்க குழந்தையை வெறுங்காலுடன் நடக்க வைக்குறது எவ்ளோ நல்லது தெரியுமா?

உங்க குழந்தையை வெறுங்காலுடன் நடக்க வைக்குறது எவ்ளோ நல்லது தெரியுமா?

Walking Barefoot for Kids : உங்கள் குழந்தையை நீங்கள் வெறுங்காலுடன் நடக்க வைக்கும் போதும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 22 2024, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Walking Barefoot for Kids in Tamil

Walking Barefoot for Kids in Tamil

வெறுங்காலுடன் நடந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இது நமக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கு கூட பொருந்தும். 

ஆம், குழந்தைகள் வெறும்காலுடன் நடக்கும்போது தரை விரிப்புகள், புல் வெளிகள் மற்றும் தளங்கள் வித்தியாசத்தை அறிந்து கொள்வார்கள். மேலும் இதனால் அவர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். எனவே இப்போது இந்த பதிவில் குழந்தைகளை வெறுங்காலுடன் நடக்க வைக்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  தினமும் 1 மணி நேரம் வாக்கிங் போனா இத்தனை நன்மைகளா?!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Walking Barefoot for Kids in Tamil

Walking Barefoot for Kids in Tamil

குழந்தையை வெறுங்காலில் நடக்க வைக்கும் போது கிடைக்கும் நன்மைகள்:

இரத்த அணுக்கள் அதிகரிக்கும்

உங்கள் குழந்தையை வெறுங்காலில் நடக்க வைக்கும் போது அவர்களது உடலில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குறைந்து சிவப்பு இரத்த 
அணுக்கள் அதிகரிக்கும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். அதுவும் குறிப்பாக குறுநடை போடும் குழந்தை வெறும் காலில் நடந்தால் அந்த குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

தசை வளர்ச்சியடையும்

பொதுவாகவே குழந்தையின் கால் ரொம்பவே மென்மையாக இருக்கும். எனவே வெறுங்காலுடன் குழந்தையை நடக்க வைக்கும் போது குழந்தையின் கால் வலுவாகுவது மட்டுமின்றி, கால் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. 

34
Walking Barefoot for Kids in Tamil

Walking Barefoot for Kids in Tamil

மூளை சுறுசுறுப்பாக செயல்படும்

செருப்பு போட்டு குழந்தையை நடக்க வைப்பது பாதுகாப்பாக இருந்தாலும், அவர்களது மூளையானது சரியான தகவலை பெற முடியாமல் போய்விடும். அதுவே குழந்தையை வெறுங்காலில் நடக்க வைக்கும் போது குழந்தையின் கால் பூமியுடன் நேரடியாக தொடர்புகொள்ளும். இதனால் குழந்தையின் மூளையானது சுறுசுறுப்பாகவும், எப்போதுமே விழிப்புணர்வாகவும் இருக்கும். மேலும்  என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை குழந்தையால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க:  மாதவிடாய் நாட்கள்ல வாக்கிங் போனா நல்லதா? உடம்புக்கு என்னாகும் தெரியுமா?

44
Walking Barefoot for Kids in Tamil

Walking Barefoot for Kids in Tamil

உணர்ச்சி வளர்ச்சி மேம்படும்

பொதுவாக நம்முடைய உடலின் ஒட்டுமொத்த நரம்புகளும் பாதத்துடன் தான் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் வெறுங்காலுடன் நடக்கும்போது உணர்ச்சியின் வளர்ச்சியானது மேம்படுத்தப்படும். இது குழந்தைகளுக்கும் பொருந்தும்.

நினைவில் கொள்:

உங்கள் குழந்தையை நீங்கள் வெறுங்காலுடன் தரையில் நடக்க வைக்கும் போது அவர்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் பல விஷயங்களையும் உங்கள் குழந்தையால் ஆராய்ந்து கற்றுக்கொள்ள முடியும். எனவே மேலே சொன்ன விஷயங்களை பெற இன்றிலிருந்து உங்கள் குழந்தையை வெறுங்காலில் நடக்க பழக்கப்படுத்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved